Skip to main content

Google ads

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

 நாம் Blow jaundice உணவு ஜீரணிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகிறது.

இதுபோலவே பித்த நீர்ப்பையில் பித்த நீர் சுரக்கிறது. இது கொழுப்புப் பொருட்களைக் கரைக்க உதவுகிறது. இந்த அமிலத்தால் அல்லது பித்த நீரால் இரைப்பையின் மெல்லிய ஜவ்வு பாதிக்கப்படலாம். புண்ணும் உண்டாகலாம்.

நாம் உண்ணும் உணவில் காரம், புளி, மசாலாப் பொருட்கள் அதிகமாகச் சேர்ந்தால் வயிற்றில் புண் உண்டாகும்.

புகை பிடிப்பது, மது அருந்துவது, இவற்றாலும் வயிற்றில் புண் உண்டாக இடம் உண்டு.

வலி போக்கும் சில மருந்துகள் வயிற்றில் கோளாறுகளை உண்டாக்குகின்றன.

நம் மனத்தில் ஏற்படும் கவலை, கோபம், பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளால் நரம்பு பாதிக்கப்படுகிறது. அமிலம் அதிகமாக ஊற்றெடுக்கக் காரணமாகிறது.

இதனாலும் வயிற்றில் புண் ஏற்படும்.இது தவிர, வயிறு முட்டச் சாப்பிடுவதாலும், வயிற்றைக் காலியாகப் போடுவதாலும் வயிற்றில் புண் உண்டாகும். எந்தக் காரணத்தால் வயிற்றில் புண் ஏற்பட்டாலும்

அது இரைப்பையைத் துளைத்துவிடும். சிலருக்கு இரைப்பையில் அடைப்பும் உண்டாகலாம். புண் காலப் போக்கில் புற்று நோயாகவும் மாறும்.

உண்ணும் உணவினால் மட்டும் வயிற்றுக்குக் கேடு வருவதில்லை.




உள்ளத்தின் உணர்ச்சிகளாலும் வயிற்றுக்குக் கேடு உண்டாகிறது.

இந்தக் கேடுகளில் மொத்த உருவம் வயிற்றில் வலி,ஒருவித எரிச்சல்.பெரும்பாலும் வயிற்றில் புண், குடலில் புண் இவை உண்டாகும்போது வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது.

 இரைப்பை - சிறுகுடலின் ஜவ்வுகள் அரிக்கப்படுவதால் வலியும், அமிலம் அதில் படும்போது எரிச்சலும் நோயாகவும் மாறும்.

அடிவயிற்றைப் பிசைவது போன்ற உபத்திரவம் உண்டாகிறது. உபத்திரவத்திற்குக் காரணமே அதிகமாகச் சுரக்கும் திரவம்தான்.

இந்தத் திரவம் இரைப்பையில் குழிப்புண்ணும், சிறு குடலில் குழிப்புண்ணும் தோன்றுவதற்கு மூலகாரணம்.

தொப்புளைச் சுற்றி வலி முதலில் ஆரம்பமாகும். பிறகு வலப் பக்கத்தில் வலி எடுக்கும். வலி தொடர்ந்து வராமல் விட்டு விட்டு வரும். இந்த நேரத்தில் வாந்தி எடுத்தால் இரத்தம் வரும். மலத்தின் நிறம் கறுப்பாக இருக்கும்.

வேகஸ் நரம்புகளும், பெப்சின் நொதியும் சூடேறுவதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். இவற்றைக் குளிர வைத்தால் வலி நிற்கும். எரிச்சல் மறையும்.இதற்குப் புதிய புதிய மருந்துகள் இப்போது வந்திருக்கின்றன.

வயிற்றில் வந்திருப்பது இரைப்பைப் புண்ணா,சிறு குடல் புண்ணா என்று அறிந்து கொள்ள எண்டார்ஸ்கோப் என்னும் நவீனக் கருவியை வாய்வழியாக விட்டு இதோடு இணைக்கப்பட்ட குழாய் மூலம் கவனித்துக் கண்டுபிடிக் கிறார்கள்.

இந்த இடங்களை உள்ளது உள்ளபடி போட்டோ எடுத்தும் பார்க்கலாம். உள்ளே என்ன கோளாறு என்று அந்த இடத்திலுள்ள திசுக்களைச் சுரண்டி எடுத்து பயாப்சி செய்தும் கண்டறி கிறார்கள்.

இந்தப் புண் பெப்டிக் அல்சரா, அல்லது டியாடெனல் அல்சரா என்றும் கண்டுபிடிக்க இந்தக் கருவிகள் உதவு கின்றன.

வயிற்று எரிச்சலை போக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

  1. வயிற்றில் எரிச்சலைத் தூண்டுவது வயிற்றுப் புண் என்பதால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பி குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
  2.  காப்பியிலுள்ள காஃபின் விஷம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அதிகமாகச் சுரக்க உதவுகிறது. ஆகவே இந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டுப் பால் நிறையக் குடிக்க வேண்டும். 
  3. வயிறு காலியாக இருக்கும்போது சிலர் சிகரெட்டை ஊதித்தள்ளுவார்கள். இதுவும் தவறு. 
  4. புரதப்பொருள் நிறைத் தயிர், முட்டை இவைகளைச் சாப்பிடவேண்டும். பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். 
  5. வயிற்றில் எரிச்சலைத் தூண்டும் மிளகாய், மிளகு, கடுகு, ஊறுகாய் ஆகியவற்றைக் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கிவைப்பது நல்லது. 
  6. அதிகச் சூடான ஆகாரங்களையும் அதிகக் குளிர்ச்சியான ஆகாரங்களையும் சாப்பிடக்கூடாது. உடலுக்கும் மனத்திற்கும் நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். மனத்தால் எந்தக் காரியத்திற்கும் எரிச்சல் படாதீர்கள். 
  7. உடலுக்கு எரிச்சல் தரும் உணவு வகைகளைச் சாப்பிடாதீர்கள்.

இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் வயிற்றின் எரிச்சலைப் போக்கலாம்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...