Skip to main content

Google ads

காய்கறிகளை சமைப்பதால் சத்துக்கள் குறைகிறதா?

 ஓர் ஆங்கிலப் பழமொழி சொல்லுவார்கள். 'மனிதனை இறைவன் படைத்தான். சமயலைச் சாத்தான் 'படைத்தான்,' என்று நாவுக்கு ருசியாக இருக்கவும் மூக்குக்கு மணத்தைத் தரும் ஏலம் பட்டைக் கிராம்புப் பொருள்களையும், கண்களுக்கு அழகாக இருக்கச் சில இராசாயன பொருள்களையும் சேர்த்துச் சமைத்துவைப்பது தான் சாத்தானின் வேலை. இப்படிச் சமைப்பதால் ஆரோக்கியத்தை மனிதன் இழக்கிறான்.

இதையும் படிக்க :  பேதி மருந்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? கெட்டதா ?

உடல் ஆரோக்கியத்திற்காக உணவு ஏற்பட்டது. உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள அல்ல. நாம் உண்ணும் உணவு எளிதாகச் சீரணிக்கவேண்டும். உடல் உறுப்புகளுக்குக் கேடு தரக்கூடாது, அந்நியப்பொருள்கள் அனாவசியமாக உள்ளே போகக்கூடாது. கவனமாகச் சமைத்து உண்ணும் உணவுதான் உடலுக்குச் சக்தி அளிக்கிறது, சத்துணவாகவும் மாறுகிறது.




பச்சை காய்கறி, கீரைகள். கிழங்குகளில் இயற்கையாக அமைந்த ஹைட்ரோலிஸ் என்று சொல்லப்படும் நீர்க் குணம், சமைப்பதால் மாறிவிடுகிறது. சமைப்பதால் காய்கறிகளில் உள்ள ஜீவ சத்துக்கள் அழிந்து விடுகின்றன. என்றும் வறுத்த, பொரித்த, தாளித்த உணவு வகைகள் அமில குணத்தைப் பெறுகின்றன என்றும் இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

உணவை ருசியாகச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடத்திலும் உண்டு. இதனாக சமையல் துறையில் புதிய நூல்கள் எழுதப்பட்டு அதிகமாக விற்பனையாகிக் கொண்டு வருகின்றன. வெளி மாநிலத்தார் என்ன வகைகளை எப்படிச் சமைக்கிறார்கள். 

இதையும் படிக்க : எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு தீமை ஏற்படுமா?

அதைப்போலவே நாமும் சமைத்து உண்ணவேண்டும் என்று ஆசை இப்போது மக்களிடத்தில் அதிகமாகப் பரவிவருகிறது. இதனால் ஆந்திர, கேரள, கன்னடச் சமையள்களையும் தாண்டி வடநாடு. மேற்கு நாடுகளின் சமையல் முறைகளையும் செய்து சாப்பிடுகிறார்கள்.

எந்த உணவாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையில் உணவைச் சாப்பிடுவதில் தவறில்லை. அது, சத்துப் பொருள்கள் நிறைந்த உணவாக இருந்துவிட்டால் மிக நல்லது. உடலுக்குக் கேடுதரும் அமைந்துவிட்டால் என்ன செய்வது? உணவாக

ஆகவே காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், தானியங்களை எப்படிச் சமைத்து சாப்பிட்டால் நல்லது, எதில் சத்துப்பொருள் உண்டு, எதில் சத்து இல்லை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்வது நல்லது.

கீரை வகைகளிலும் முட்டைக்கோசிலும் பச்சை நிறமுள்ள பகுதியில்தான் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது. வெள்ளையாகத் தோன்றும் பகுதியில் சத்தில்லை. இதனால் முட்டைகோசின் உட்பகுதியை அதிகமாகச் சாப்பிட வேண்டும். 

இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கைத் தோலுடன் வேகவைத்தால் தோலில் உள்ள வைட்டமின் சி-சத்து நமக்குக் கிடைக்கிறது. சமைத்த பிறகு தோல் உரித்துச் சாப்பிடுவது நல்லது. கிழங்குகளை உடனுக்குடன் சமைத்துச் சாப்பிடுவது நல்லது, 

உடனே சமைக்க முடியாவிட்டால் அதை நறுக்கி உப்புப் போட்டுத் தண்ணீரில் கழுவி ஈரத் துணிகளில் மூடிவைப்பது நல்லது. குளிர் சாதனப் பெட்டி உள்ளவர்கள் அதில் வைத்துப் பாதுகாக்கலாம். 

இதையும் படிக்க : அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? கெட்டதா ?

கிழங்குகளில் உள்ள செல். தோல் நீக்கப்படும்போது வெளிவரும் என்சைம் வைட்டமின் • சி-யை அழித்துவிடுகிறது. காய்கறிகளை நறுக்கி உடனே வெந்நீரில் போட்டால் என்சைம் சத்து அழிந்து விடுகிறது.

சமைப்பதால் வைட்டமின் சத்துக்கள் முழுவதும் அழிந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வைட்டமின் நஷ்டமடைகிறது என்பது மட்டும் உண்மை. சமைப்பதால் நன்மைகளும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

காய்கறிகளில் உள்ள மாவுப் பொருள்களும் கரிப் பொருள்களும் சமைக்கும்போது வரவேற்கத்தக்க மாறுதலை அடைகின்றன. மாவுப் பொருள்கள் எளிதில் ஜீரணமாகும் படி டெக்ஸ்டரின் என்று ஆகிறது. 

மீதி கரையும் பொருளாகிறது. இதனால் ஜீரண வேலை சுலபமாக நடக்கிறது. காரெட் கிழங்கில் உள்ள வைட்டமின் சத்து சமைப்பதால் அழிகிறது.

காய்கறிகளில், பழங்களில் உள்ள சர்க்கரை வெகு எளிதில் ஜீரணமாகிறது அமிலப் பழங்களில் உள்ள சர்க்கரை குளுகோஸாக மாறுகிறது. நோயாளிகளுக்கு குளுகோசைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கிறோம். அதுபோல் குளுகோஸ் சத்து கொள்ளப்படுகிறது. உடலில்

அப்படியே ஏற்றுக் சமைப்பதால் கனிம உறுப்புக்கள் நஷ்டம் அடைவதில்லை. வைட்டமின் சி-யும் வைட்டமின் பி-யும்தான் பாதிக்கப்படுகின்றன. என்றாலும் அதிக நஷ்டமில்லை.

சிலர் எளிதில் வேகவைக்கச் சோடா மாவைத் குழம்பில் கலக்கிறார்கள். இதனால் வைட்டமின் நஷ்டம் உண்டாகிறது. கிழங்குகளைச் சமைத்த பின் அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. உடனே சாப்பிடவேண்டும்.

வேகவைக்காத எந்த உணவும் குடலுக்கு நல்லது அல்ல. இது போலவே ஆகாரப் பொருளை அளவுக்கு அதிகமாக வேகவைப்பதாலும் தீமை உண்டாகிறது. இதனால் அக்ரோலீன் எந்த விரும்பத்தகாத ஒரு பொருள் உண்டாகி உணவை நஞ்சாக்குகிறது. 

இதையும் படிக்க : முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? எப்படி தடுப்பது?

காய்கறி மற்றும் கிழங்குகளைத் தண்ணீரில் போட்டுக் கழுவியே சமைக்க வேண்டும். கீரைகளையும் கழுவியே சாப்பிட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காய்கறிகளில் இராசாயனப் பொருள்கள் கலந்துவிடுகின்றன. இதற்காகவாவது கழுவவேண்டும்.

சமைப்பதால் சத்துக்கள் 100-க்கு 100 போவதில்லை! இதனால் நன்மையே அதிகம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...