இந்த உலகில் எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் ஒரு சக்தி உண்டு என்றால் அது நோய் ஒன்று தான். பிறந்த குழந்தை என்றோ சாகப் போகும் பெரியவர் என்றோ, எவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதன் என்றோ,மிருகம் என்றோ பேதம் பார்ப்பதில்லை.
ஆண் என்றோ,பெண் என்றோ,பணக்காரன் என்றோ, ஏழை என்றோ பாகுபாடு பார்ப்பதில்லை. படித்தவன் என்றோ, பாமரன் என்றோ ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. சொல்லாமல் வருகிறது. கொல்லாமல் கொல்லுகிறது!
இந்த நோய்களில் மட்டும் இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. ஒன்று தொற்றும் நோய்கள். இன்னொன்று தொற்றாத நோய்கள்.
நோய்களில் சில மனிதனைத் தொத்திக் கொண்டு அவன் மூலம் இன்னொரு மனிதனை வாரி வளைத்துப் போடுவதைப் பார்க்கிறோம்.
பெரியம்மை, சின்னம்மை, மணல்வாரி, தட்டம்மை கிச்சிலுப்பை, நீர்க் கொளுவான், புட்டாலம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி, சொறி, சிரங்கு. டிப்தீரியா, டெட்டனஸ், கக்குவான், மூலைக் காய்ச்சல், டைபாய்ட், பாரா டைபாய்ட், இளம்பிள்ளை வாதம். டி.பி. தொழுநோய் என்று, தொத்தும் நோய்களைப் பட்டியலாகப் போடலாம்.
தொத்தும் நோய்கள் அனைத்தையும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளால் உண்டாகின்றன. ஒவ்வொரு நோய்க்கும் ஒருகிருமி உண்டு. சில நோய்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நோய்க் கிருமிகளாலும் தொந்தரவு உண்டு.
உதாரணமாக, இளம்பிள்ளை வாதத்தின்போது மூன்று வகை வைரஸ் கிருமிகளால் தாக்குதல் நடப்பதால் மூன்று வித வாக்சின் சேர்த்துக் கொடுக்கும் நிலைமை ஏற்படுகிறது.
ஒவ்வொரு நோய்க்கும் Incubation period என்று சொல்லப்படும் கனிவான காலம் இருக்கிறது. இந்தக் காலத்தில்தான் பிறரிடம் தொற்றுகிறது.
நோய் கனியும் காலம் நோய்க்கு நோய் வித்தியாசப்படுகிறது. அந்தக் காலத்தில்தான் நோய்க் கிருமிகள் இடம் விட்டு இடம் மாறுகின்றன.
கிருமி தொற்றுதல் முதல், நோய் தோன்றும் காலம் வரை இன்குபேஷன்காலம் என்று ஒரு சில நாட்களைக் குறிப்பிடுகிறார்கள். அம்மை நோய்க்குக் கனிவுக் காலம் 12 நாட்கள்என்றும், சிக்கன் பாக்ஸ் என்று சொல்லப்படும் நீர்க்கொளுவான் நோய்க்கு, இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் என்றும், கக்குவான் இருமலுக்கு எட்டுமுதல் பதினான்கு நாட்கள் என்றும், மூலைக் காய்ச்சல் நோய்க்கு ஒன்று முதல் ஐந்து நாட்கள் என்றும், இளம் பிள்ளை வாதத்திற்கு நான்காவது நாளிலிருந்து முப்பதாவது நாள்வரை என்றும், டைபாய்டு ஜூரத்திற்கு 10 ஆவது நாளிலிருந்து 15ஆவது நாள் வரை என்றும், இப்படி நோய்க்கு நோய் கனிவுக் காலம் வித்தியாசப்படுகிறது. சில நோய்களுக்கு மாதங்களும் வருடங்களும் கூட ஆவது உண்டு. தொழு நோய்க்கு ஆண்டு வரை என்று எல்லையைக் குறிக்கிறார்கள்.
தொத்தும் நோய்கள் எல்லோரிடமும் தொத்துவதில்லை. எவர் உடம்பில் நோய் எதிர்க்கும் சக்தி முழுமையாக இருக்கிறதோ அவர்களிடம் எந்தத்தொத்து நோயின் ஜம்பமும் நடப்பதில்லை.
பலவீனமான உடல். நல்ல போஷாக்கு இல்லாத மனிதர்களை சில நோய்கள் பதம் பார்த்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர் நோய்தாங்கிகளாக நம்மிடையே உலவுகிறார்கள். இவர்களைக் கேரியர் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் மூலம் பலருக்கு நோய் தொத்திக் கொள்கிறது.
யார் நோய்தாங்கிகள் என்று கண்டு பிடிப்பதுதான் சுஷ்டம். நோய்க் கிருமிகள் சில ஈக்களால் எடுத்துவரப்படுகின்றன. கொசுக்களால் 'எடுத்து வரப்படுகின்றன, காற்றில் பறந்து வருகின்றன.நாம் உண்ணும் உணவில், குடிக்கும் நீரில் நோயாளியின் உடையில், அவர் உண்ட பாத்திரத்தில், நோயாளியின் மலத்தில், சிறுநீரில், நீர்த் 'துளிகளில், பல நோய்கிருமிகள் மற்றவர்களுக்குப் பரவுகின்றன. வகைகளில்
இருமும் காற்றில், தும்மும் சளியில்,வாந்தியில் இப்படிப் இதனால் நோயாளி இருக்கும் வீட்டில் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய் பரவுகிறது. இதனால் கூடுமானவரை நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பது நல்லது. இயலாது என்றால் அவர்களைத் தனி அறையில் வைத்துப் பாதுகாப்பது சிறந்தது.
நோயாளிகளைத் தவிர குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நோய்த் தடுப்பு வாக்ஸீன் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். தொத்தும் நோய்கள் எல்லாவற்றிற்கும் தடுப்பு ஊசிகள் உண்டு. முன்னெச்சரிக்கையாகத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்தால் நோய் மற்றவர்களுக்குப் பரவாது.
டி.பி. நோயாளி ஒருமுறை தும்மும்போது, அல்லது கபத்தைக் காரித் துப்பும்போது நீர்த் துளிகளின் வேகம் மூன்று அடிக்குத் தெறிக்கிறது. இப்படி ஓர் அபாயம் இருந்தால் டி.பி. நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் இருக்குமா?
ஒரு நோய் தொத்து நோய்தானா என்பதைக் கண்டு பிடிக்க இரத்தப் பரிசோதனை ஒன்று போதும். தொத்தும் நோய்க்கிருமிகள் இரத்தத்தில் இருப்பதை அறிந்ததும் டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். பிற்கு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியப் படுத்தினால் அவரும் நோயாளி ஆகி, மற்றவர்களையும் நோயாளிகளாக ஆக்கிவிடுகிறார்.
Comments
Post a Comment