Skip to main content

Google ads

எலும்பு முறிவை சரிசெய்ய செய்ய வேண்டிய வழிமுறைகள்

 விபத்திலோ விளையாட்டிலோ, திடீரென்று அடிபடுகிறது. அடிபட்டவிடத்தில் வலி எடுக்கிறது சிறிது நேரத்தில் வீக்கம் ஏற்படுகிறது. கையிலோ காலிலோ காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வலி எடுக்கிறது.

 அந்த இடத்தில் வேதனை உண்டாகிறது. இது என்ன ஊமைக் காயமா? சுளுக்கா? அல்லது எலும்பு முறிவா என்று தெரியவில்லை. உடனே என்ன செய்வது? எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது அவசியம்.

சுளுக்கு, எலும்பு முறிவு இந்த இரண்டிற்கும் ஏறக்குறைய ஒரே சிகிச்சை முறைதான். அதிக வித்தியாசம் இல்லை. நம்மில் பலர் சுளுக்கை (அதாவது ஆங்கிலத்தில் ஸ்பிரெயின் என்று சொல்லப்படும் பாதிப்பை) நரம்பில் ஏற்படும் கோளாறு என்று நினைத்துவிடுகிறார்கள். 

இது நரம்பில் ஏற்படும் நோய் என்று சொல்லுவது தவறு. தசை பிசகியிருக்கிறது என்பதுதான் சரி. தசை பிசகியிருந்தால் பிஸியோதெரபி மூலம் இந்தக் கோளாறைப் போக்கலாம். எலக்டிரிக் ஹீட் சிகிச்சை இருக்கிறது. இரத்தக் கட்டாக இருந்தாலும் சரிசெய்துவிட முடியும்.



மூட்டுக்கு உள்ளே தசைப் பிசகுவதால் விளையாட்டு வீரர்கள் இதனால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆர்த்ரோஸ்கோப் என்ற கருவி மூலம் இதைச் சோதித்து அறியலாம். தசை பிரண்டிருந்தால் அதை அப்புறப் படுத்தலாம். இதனால் பாதிப்பு உண்டாவதில்லை. 

வலியையும் வீக்கத்தையும் குறைக்க அந்தப் பகுதியில் ஐஸ் வைத்தால் போதும், குறைந்துவிடும். ஐஸ் கிடைக்காத போது ஈரத் துணியையும் அந்தப் பகுதியில் சுற்றி வைக்கலாம். பிறகு இந்தப் பகுதியை வெந்நீரில் நனைக்கலாம். அழுத்தித் தேய்க்கக்கூடாது. இதனால் வேறு சில உபத்திரவங்களும் உண்டாகும். கை கால் விரல்களை அசைப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனே எலும்பு சிகிச்சை டாக்டர்களிடம் காட்டவேண்டும்.

சாதாரணமாக ஏற்படும் சிறு விபத்துக்களில் அடிபட்டுக் காயம் உண்டாகியிருந்தால் கம்ப்ரெசை வைத்துக் கட்டுப்போடலாம்.

பலமான விபத்து ஏற்பட்டு அடிபட்டிருந்தால். அல்லது கீழே விழுந்து கை கால்களில் அடிபட்டிருந்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். எக்ஸ்ரே மூலம் எலும்பு முறிவுகளைக் கண்டுபிடித்துவிடலாம். 

முழங்கை, அல்லது தோள்பட்டை, மணிக்ட்டு, கால் எலும்பு, பாத எலும்பு, தொடை எலும்பு, கூபக எலும்பு என்று சொல்லப்படும் பெல்விஸ் ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டிருந்தால் ஆர்த்தோ சிகிச்சை முறையில் உடனே காலதாமதமில்லாமல் செய்துகொள்வது மிகமிகச் சிறந்தது. இல்லாவிட்டால் உறுப்புக்கள் ஊனமாகி, செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். இதனால் எத்தனையோ ஆபத்துக்களும் உண்டாகும்.

இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டால் அது சற்றுச் சிக்கலானது. நவீன மருந்துவத்தில் பந்துக்கிண்ணத்தை ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முறையில் உருவாக்கி அந்தப்பகுதியில் பொருத்திவிடுகிறார்கள். பிளாஸ்டிக்கிலும் இப்படி ஓர் உறுப்பு இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து  உருவாக்கப்படுகிறது.

 இந்தியாவில் தயாரிக்கப்படும் உறுப்புக்களும் உண்டு, தொடை எலும்பின் மேற்பகுதியில் இரும்புத் தகட்டைப் பொருத்தி ஸ்குரூ போட்டு முடுக்கிவிடுகிறார்கள். இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. பெரும் பாலான் எலும்பு முறிவுகளை இணைக்கத் துருப்பிடிக்காத உலோகத் தகடுகளை எலும்பு முறிந்த இடத்தில் இரண்டு பக்கமும் பொருத்தி ஸ்குரு போட்டு முடுக்கி எலும்புகளை இணைத்து விடுகிறார்கள். இதன் பின் எல்லோரையும் போல் நடக்கலாம். உட்காரலாம். படுக்கலாம்.

ஓடிந்த எலும்புகள் ஆடாமல் அசையாமல் இருக்கச் சிம்புகள் என்று சொல்லப்படும் Splints வைத்துக் கட்டும் முறை, இப்போது மாறி இருக்கிறது. மாவுக் கட்டுப் போட்டு நீண்ட நாட்கள் எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்யும் முறை பிரிட்டிஷ் சிகிச்சை முறை, இது பழமையானது.

 இதனால் சிகிச்சை மாதக் கணக்கில் ஆகிறது. அது மட்டுமல்ல. சதை அசைவில்லாமல் போவதால் வேறு சில தொந்தரவுகளும் உண்டாகின்றன. எனவே டாக்டர்கள் இப்போது புதிய முறையில் எலும்பு முறிவுகளுக்கு நவீன முறை வைத்தியம் செய்து வருகிறார்கள்.

சிறுவயதில் முட்டிக்கால் தட்டும் ஒரு கோளாறுக்கு ஆஸ்டியோடமி ஆப்ரேஷன் மூலம் முட்டிக்கால்களை நேர்படுத்திக் கம்பி இணைத்து பூட்ஸ்களை அணியச் செய்து அந்தக் குறைபாடுகளைப் போக்கும் புதிய உத்திகளையும் நவீன ஆர்த்தோ எலும்பு சிகிச்சை நிபுணர்கள் செய்து வருகிறார்கள். 

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட மருத்துவ வசதிகளை நிரம்பப் பெற்று அற்புதங்களை செய்து வருகிறது. இனி எலும்பு முறிவு சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் இல்லை. இங்கேயே எல்லோருக்கும் எல்லா மருத்துவ வசதிகளும் உண்டு. பணம்தான் வேண்டும்!

சென்னையில் எலும்பு முறிவுச் சிகிச்சை செய்து வரும் டாக்டர்கள் எஸ்.எஸ்.கே மார்த்தாண்டம் மேற்கு ஜெர்மனி சென்று பயிற்சி பெற்று வந்து ஜி.ஜி. ஆஸ்பத்திரியில் ஆர்த்தோ சர்ஜனாகப் பணியாற்றுகிறார். அவர் சொன்ன தகவல்களைக் கட்டுரையாக்கிக் தந்திருக்கிறேன். படித்துப் பயன் பெறுங்கள்!

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...