காச நோய் என்றும், உருக்கி நோய் என்றும், இராஜ ரோசும் என்றும் தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் டியூபர் குளோசிஸ் டி.பி. நோயைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். இந்த நோயை க்ஷயரோகம் என்றும்சிலர் அழைக்கிறார்கள். க்ஷயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பலியிடுதல், முடித்துவைத்தல் என்று பொருள். சுமார் 102 வருஷங்களுக்குமுன் காச நோய்க் கிருமியை ராபர்ட் காக் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோய்க்குப் பலியாகும் மக்களைக் குணப்படுத்த பல விஞ்ஞானிகள், பல்வேறு சிகிச்சை கண்டுபிடித்து வைத்தியம் செய்துவந்தார்கள். முறைகளைக் இந்த நோய் வராமலே தடுப்பது எப்படி என்று இரண்டு மருத்துவ விஞ்ஞானிகள் பாரிசிலுள்ள பாஸ்டர் நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தார்கள். ஒருவர் மனித டி.பி. நோய்களுக்கு ஆராய்ச்சி செய்தார். இவர் பெயர் கால்மெட் என்பது. இன்னோருவர் மிருகங்களைத் தாக்கும் டி.பி.கிருமிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் பெயர் கெரின். இருவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள். இவர்கள் கண்டுபிடித்த வாக்சின் மருந்திற்கு நோய்க் கிருமியின் பெயரோடு இந்த இரண்டு பேர்களின் பெயரையும் சேர்த்து வைத்து விட்டார்கள். Bacillus Calmette Gueri...
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,