Skip to main content

Posts

Showing posts from December, 2021

Google ads

டயாலிசிஸ் சிகிச்சை முறை என்றால் என்ன ?அறியாத தகவல்கள்- Medical Tamizha

டயலிசிஸ் என்றால் என்ன?  ✷ சிறுநீரகம் சீர்குலைந்தால் வயிற்றைக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். அதுபோல் இரத்தத்தைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும்.  ✷வயிற்றைக் கழுவும் முறையை பெரிடோனியல் டயலிசிஸ் என்று பெயர். ஹீயோ டயலிசிஸ் என்றால். இரத்தத்தை சுத்தம் செய்யும் முறை என்று பொருள். சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இரண்டு வகைகளில் சுத்தம் செய்து சிறுநீரகத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.  ✷சிறுநீரகம் என்ன காரணங்களால் பாதிக்கப்படுகிறது. என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். கிருமிகளால் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தாக்கப்படுகிறது. சில சமயம் மருந்துகளினால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் பாதிக்கப்படலாம். டயாலிசிஸ் சிகிச்சை முறை   ✷நீரழிவு நோய் இருந்தாலும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படும். இரத்தக் கொதிப்பு அதிக அளவில் இருந்தாலும், மிதமான அழுத்தம் நீண்ட நாள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகப் பாதையில் கல்லடைப்பு இருந்தாலும் கோளாறு உண்டாகும்.  ✷சிறுநீரகத்திலிருந்து பைக்கு வரும் குழாயின் அடிப்பாகம் மூடித் திறக்கும் அமைப்பு உடையது. அது இயங்காமல் திறந்து இருந்த...

வீட்டுப் பிராணிகளால் இவ்வளவு நோய்கள் உருவாகுமா ? ஐயோ !

 ✷மனிதன் தன் சுயநலத்திற்காக மிருகங்களையும் பிராணிகளையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றைத் தன் வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்தான்.   ✷சவாரி செய்யக் குதிரையையும், பாலுக்காகப் பசுவையும், ஆட்டையும், உழவுக்காக மாட்டையும், காவலுக்காக நாயையும், எலிகளை ஒழிக்கப் பூனையையும் வளர்க்க ஆரம்பித்தான். அவற்றின் மீது பரிவுகாட்டி நாய் பூனைகளை மடிமீது வைத்துக் கொஞ்சவும் ஆரம்பித்தான்.  ✷இதனால் பிராணிகளைத் தாக்கும் நோய்கள் மனிதனுக்கும் தொற்றிக்கொண்டு மனிதனை ஆட்டிப் படைத்தன.  ✷நாம் விரும்பாமலே நம் வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கும் பிராணி எலி. எப்படியோ அடுக்களையில் புகுந்துகொண்டு சமையலுக்காக வைத்திருக்கும் அரிசி, பருப்பு, காய்கறி பொருட்களைத் தின்று நமக்குத் தொல்லை கொடுப்பதிலிருந்து பிளேக் நோயைப் பரப்புவது வரை எலிகள்-பெருச்சாளிகள் பல கெடுதல்களைச் செய்கின்றன.   ✷எலிகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒருவகை ஈக்கள் மனிதனைக் கடிக்கின்றன. எலியிடம் பெற்ற நோய் மனிதனுக்குப் பரவுகிறது. பிளேக் நோய் உண்டாகிறது. இப்போது இந்த நோயின் அட்ட காசங்கள் குறைந்துவிட்டன என்றாலும் முற்றிலும் ஒழியவில்லை. ...

உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ✷உயரமாகவோ, அல்லது குள்ளமாகவோ இருக்க யார் காரணம் என்று ஆராய்ந்ததில் பெற்றோர் காரணம், நம் முன்னோரே காரணம், என்று ஆராய்ச்சிகளின் முடிவு தெரிவித்தது. ✷பெற்றோர்களும், முன்னோர்களும், உயரமாக இருந்தால் அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் உயரமானவர்களாக வளர முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். ✷இந்தக் கருத்தில் ஓரளவு தான் உண்மை இருக்கிறது என்று பிறகு வந்த விஞ்ஞானி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துச் சொன்னார்கள். ✷ஒரே குடும்பத்தில் ஒருவர் குள்ளமாகவும், மற்றவர் நெட்டையாக உயர்ந்தும் இருக்கும் போது இதற்கும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகள் காரணமாக இருக்க முடியாது.வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள். ✷அவர்களின் ஆராய்ச்சிப்படி மனித மூளையில் பிட்டியூட்டரி கிளாண்ட் என்ற ஒரு சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் என்ற ஒருவித இரசாயனப் பொருளே ஒருவர் உயரமாகவும் குள்ளமாகவும் வளரக் காரணம் என்று கண்டு பிடித்துச் சொன்னார்கள். ✷ 1920 ல் கலிபோர்னியா பல்கலைக் கழக டாக்டர் ஹெர்பர்ட் எம் எவன்ஸ் என்பவர் மாடு ஒன்றின் ஹார் மோனை எடுத்து, எலிகளின் உடலில் செலுத்தினார். எலிகள் ...

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

மலத்தில் ரத்தம் வருவதை தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

  ✷கழிவுப் பொருள்களோடு சில வேளைகளில் இரத்தமும் வெளியேறுவது உண்டு. சாதாரணமாகச் சிரமத்துடன் மலம் கழிக்கும் போது சில துளிகள் இரத்தம் வரலாம்.  ✷இதுவே தொடர்ந்து நடந்தால் உடலுக்கு மட்டுமல்ல,  ✷உயிருக்கும் ஆபத்து. மலத்தில் இரத்தம் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதற்குக் குடல் நோய்களும் ஒரு காரணம்.  ✷குடல் நோய்களில் அமீபியாசிஸ் என்று சொல்லப்படும் அமீபா கிருமிகளால் உண்டாகும் நோயும்.  ✷ஷீகெல்லா என்று சொல்லப்படும் கிருமிகளால் உண்டாகும் நோயும், மலம் கழிக்கும்போது இரத்தம் வரக் காரணமாக இருக்கின்றன.  ✷இந்த நோயாளிகளில் ஒரு நாளைக்குப் பல தடவை மலம் கழிப்பார்கள். மலத்தில் சளியும் இரத்தமும் வரும். மலத்தை சோதித்துப் பார்த்தால் அமீபா கிருமிகளும் ஷீகெல்லா கிருமிகளும் காணப்படும்.   ✷அமீபா கிருமிகளால் உண்டாகும் மலப் போக்கில் இரத்தம் குறைவாகவும் மலம்; அதிகமாகவும் வெளியேறும். துர்நாற்றம் கடுமையாக இருக்கும். மலத்தில் ரத்தம் வருதல்  ✷அமீபா கிருமியால் இன்னோர் ஆபத்தும் உண்டு. இந்தக் கிருமி கல்லீரலுக்குப் போய் அந்த இடத்தில் புண்ணை உண்டாக்கும். இதனால் பலவிதக் கெடுதல்கள் உண்...

மருந்தும் விஷம் ஆகலாம்! உஷாராக இருங்கள்!அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு நோயைக் குணமாக்கும் ஒரு மருந்து, நோயாளிகளின் உடலில் பதுங்கி இருக்கும் நோயைக் காலப் போக்கில் தூண்டிவிடும். Drug என்றாலே விஷம் கலந்த மருந்து என்று மருத்துவ அகராதி கூறுகிறது. சில நோய்க் கிருமிகளைக் கொல்ல மருந்தில் விஷம் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்க்கப் இந்த பட்டிருக்கிறது. சில மருந்து பாட்டில்களில் விஷம் என்று குறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மருந்துகளை டாக்டர்களின் சிபாரிசுச் சீட்டு இல்லாமல் சில மருந்துக் கடைகளில் கொடுக்கமாட்டார்கள்.  சில மருந்துகளை டாக்டர்கள் அளவோடு சாப்பிடும்படி ஆலோசனை கூறுவார்கள். காரணம், இந்த மருந்துகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கும்.  குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே சில மருந்துகளை டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் படி கட்டளை போடுவார்கள். காரணம், குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் மருந்து விஷமாகிவிடுகிறது. ஆனால் சில நோயாளிகள் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை,ஆலோசனைகளைக் கேட்பதில்லை. நோய் குணமாகிச் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்கிற ஆசையில் அதிகமாக,அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விடுகிறார்கள்.  ஒரு மருந்து, தலைவலி, காய்ச்சல், உடம்புவ...

புற ஊதாக் கதிர்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?

 விஞ்ஞான வித்தகர்கள் பல நாடுகளின் சூரியக் கதிர்களை ஆராய்ந்தனர். சூரியனின் கதிர்களில் ஏழுவித நிறங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். ஊதா. அவுரி நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டார்கள். இதை ஹீலியோ பயாலஜி என்றும் தமிழில் சூரிய ஒளி உயிரியல் ஆய்வு என்றும் கூறுகிறார்கள். உலக நாடுகளின் பிளேக் நோய், காலரா நோய், டி.பி. நோய், இன்புளுயன்சா ஆகிய நோய்கள் பரவி இருந்த கால கட்டங்களை ஆராய்ந்த போது சூரியனில் ஏற்படும் கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று உலக நாட்டு விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தக்க ஆதாரங்களுடன் சான்று. சூரியனிலிருந்து வெளிப்படும் ஊதா நிறக் கதிர் வீச்சுக்கு அல்ட்ரா வயலட் ரேஸ் என்று பெயர். இந்த ஊதா நிறக் கதிர் உச்சி நேரத்தில் வெளிப்படுகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் படிப்படியாக உயர்ந்து உச்சிக்கு வரும் நேரத்தில் ஊதா நிறக் கதிர்களை குளித்துப் பாய்ச்சுகிறது. இந்த நேரத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பூமியைத் தாக்குகின்றன. உச்சி நேரத்தில் நாம் வெளியே செல்லக் கூடாது. அப்படியே வெளியே செல்வதாக இருந்தால் குடை பிடித்துக் கொண்டு போவது நல்லது. உடல் மூடப்பட்ட...

ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்க என்ன செய்ய வேண்டும்?

 ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளோ, அல்லது மூன்று ஆண்டுகளோ ஆகிக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்றால் வருத்தம் ஏற்படுகிறது.  பெற்றோருக்கும். மற்றோரும் திருமணம் ஆன பெண்ணைத்தான் பெரும்பாலும் குற்றம் சொல்லுவார்கள். காரணம் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெண்ணின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த விஷயத்தில் ஆண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.    திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையென்றால்ஆண்களுக்கு  பொறுப்பில்லையா? திருமணத்திற்குப் பிறகு குழந்தை இல்லை என்றால் ஆண்களுக்குத்தான் அதிகப் பொறுப்பு உண்டு. அமெரிக்காவில் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாத கணவர்களையும், மனைவிகளையும் சோதனை செய்தார்கள். இதில் 60 சதவிகிதம் குறைபாடுகள் ஆண்களிடமே இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். பெண்களிடத்திலும் குறைபாடுகள் உண்டு. என்றாலும் ஆண்களைச் சோதனை செய்து பார்ப்பதில் சுலபமான, சிரமமில்லாத பல வழிகள் இருப்பதாகப் பிள்ளைப் பேறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சோதனை செய்து பார்ப்பது சென்டி மீட்டர் கொள்ளளவில் ச...

பாலியல் நோய்கள் என்றால் என்ன? பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?

 ஆபத்தான நோய்கள் என்று சொல்லப்படும் சிபிலிஸ், கொனேரியா நோய்கள் உலக நாடுகள் முழுவதும் பரவி மனித சமுகத்திற்கு பெரும் சாபக் கேடுகளாக தலைவிரித்து ஆடுகின்றன. இந்தியாவில் 20 இலட்சம் பேர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டின் மூலமாகவே தோன்றியது என்றாலும் ஒழுக்க சீலர்களையும் தொற்றிக்கொண்டு வெளியே தலைகாட்ட முடியாமல் அணுவணுவாகக் கொல்லுகிறது. சிபிலிஸ் என்றும், கிரந்தி நோய் என்றும், மேக நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய் டிரிபோனீமா பாலிடம் என்ற கிருமிகளால் உண்டாகிறது. கொனோரியா கானோகாக்கல் என்ற கிருமிகளால் தோன்றுகிறது. இந்த நோய்க் கிருமிகளால் வெளிச்சம் பட்டால், வெளி உஷ்ணத்தில் செத்துவிடும். இதனால் மறைவாக இருந்தே மனித குலத்திற்கு தீமை செய்கின்றன. இக்கிருமிகள் தவறான, நெறிகெட்ட ஆண்களிடம் பெண்களிடம் பிறப்பு உறுப்புக்களில் தங்கிக்கொண்டு உடலெங்கும் பரவி விடுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இன்பம் என்ற போர்வையில் இன்னலை மட்டுமல்ல, இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிறது. ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ தொற்றிக்கொண்டு அவர்களுக...

அலர்ஜி கொப்புளங்கள் என்றால் என்ன? அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?

 குழந்தைகளுக்கு எவ்விதக் காரணமும் இல்லாமல் உடம்பில் கொப்புளங்கள் உண்டாவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வந்தன என்பதை அறிய முடிவதில்லை. டாக்டரிடம் காட்டினால் இது ஒரு வகை அவர்ஜியினால் உண்டாகிறது என்று சொல்லுகிறார். இதற்கு அர்டிகாரியா அழைக்கிறார்கள். என்று மருத்துவப் பெயரிட்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு பொருள் உடம்பில் சேர்வதால் இது உண்டாகிறது. இதை அலெர்ஜன்கள் என்றும் அழைக்கிறார்கள். உணவு வகைகளில் சில கொப்புளங்களை காற்றில் மிதந்து வரும் மகரந்தப் பொடிகளும் கொப்புளங்களை உண்டாக்கலாம். அல்லது குழந்தைகள் நோய் வாய்ப் படும் போது கொடுக்கப்படும் மருந்து வகைகளும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம். இவை உடம்பில் புகுந்து அலர்ஜி விளைவுகளை உண்டாக்கிக் கொப்புளங்களாக வெடிக்கும். பொதுவாகக் குழந்தைகளையே அலர்ஜி அதிகமாகப் பாதிக்கிறது. யுர்டிகாரியா கொப்புளங்கள் என்று ஒரு வகை உண்டு. இது மருந்துகளால் குழந்தைகளின் தோலில் சிவப்பு இளஞ். சிவப்புக் கலந்த புள்ளிகள் முதலில் தோன்றும். பிறகு இதுவே சிறுசிறு கொப்புளங்களாக மாறும். ஓரிடத்தில் தோன்றும். பிறகு வற்றிவிடும். இன்னோர் இ...

வியர்வை நாற்றம் போக என்னென்ன செய்ய வேண்டும்?

 நம்மைச் சுற்றியுள்ள இடமும் சரி, சுற்றியுள்ள மனிதர்களும் சரி, தூய்மையாக இருந்தால் அந்த இடத்தையும், மனிதர்களையும் விட்டு நாம் விலகிப் போக விரும்பமாட்டோம். என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் மிக வேண்டியவனாக இருந்தாலும் அவனிடம் கெட்ட வாடை வீசினால் நெருங்கிப் பழக நம் மனம் இடம் தருவதில்லை. ஆகவே மக்களைக் கவர்ந்து இழுக்க நல்ல குணம் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல வாடையும் நம்மைச் சுற்றி வீசவேண்டும். மனிதன் நெருங்கிப் பழகத் தடையாக இருப்பது வாய் நாற்றமும், வியர்வை நாற்றமும் என்பதை எவரும் ஒப்புப் கொள்வர். கெட்ட வாடை காரணமாக, கணவன் மனைவி நல்லுறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களில் உடல் தூய்மையும் ஒன்று. உடல் நாற்றத்திற்குக் காரணம் குடல் நாற்றம், குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்.  ஆகவே இதற்கு மலச்சிக்கல் ஒரு காரணம், மலச்சிக்கல் உள்ளவர்களின் உடம்பிலிருந்து வரும் வியர்வை நாற்ற மடிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வியர்வை நம் உடலுக்கு நன்மை செய்வதற்காகவே அமைந்த ஒரு நல்ல திரவம். தினசரி 24 மணி...

உடல் எடையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூமிக்குப் பாரமாகவும், சோற்றிற்குக் கேடாகவும் இருக்கிறார்கள் என்று ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் வேலை இல்லாத வாலிபர்களைப் பற்றிக் கூறுவார்கள் பெரியவர்கள். ஆனால் இப்போது பூமிக்கு மட்டும் பாரமாக இல்லை. சுமந்துகொண்டு தங்களுக்கே பாரமான உடலை வைத்துக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் உடல் எடையை வயதிற்கும், உயரத்திற்கும் தகுந்தபடி வளர்த்துக் கொள்ளாமல் அளவுக்குமீறிப் பெருக்கிக் கொண்டதுதான். சாதாரணமாக, வளரும் காலத்தில் ஆண்களும் பெண்களும் நன்றாகச் சாப்பிட்டு, ஓடி விளையாடி உடல் எடையைப் பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சி 16 வயதிலிருந்து 30, 40 வயது வரை நீடிக்கிறது. இவர்கள் தங்களையும் அறியாமல் உடல் எடையைப் பெருக்க வைத்துக் கொள்கிறார்கள். உடல் எடை பெருக்கத்தால் நடு வயதில்தான் பிரச்னையே எழுகிறது. வயதுக்கு வந்த பெண்களும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் சில சமயம் உடல் எடை கூடுவதால் சிரமப்படுகிறார்கள். உடல் எடை கூடுவரற்குக் குடும்பப் பாரம்பரியம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஓரளவு உண்மை என்றாலும் உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கி உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். உடல் எடைக் ...