ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளோ, அல்லது மூன்று ஆண்டுகளோ ஆகிக் குழந்தை எதுவும் பிறக்கவில்லை என்றால் வருத்தம் ஏற்படுகிறது.
பெற்றோருக்கும். மற்றோரும் திருமணம் ஆன பெண்ணைத்தான் பெரும்பாலும் குற்றம் சொல்லுவார்கள். காரணம் குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு பெண்ணின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதனால் இந்த விஷயத்தில் ஆண்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்கவில்லையென்றால்ஆண்களுக்கு பொறுப்பில்லையா?
திருமணத்திற்குப் பிறகு குழந்தை இல்லை என்றால் ஆண்களுக்குத்தான் அதிகப் பொறுப்பு உண்டு.
அமெரிக்காவில் திருமணம் ஆகிக் குழந்தை இல்லாத கணவர்களையும், மனைவிகளையும் சோதனை செய்தார்கள். இதில் 60 சதவிகிதம் குறைபாடுகள் ஆண்களிடமே இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள்.
பெண்களிடத்திலும் குறைபாடுகள் உண்டு. என்றாலும் ஆண்களைச் சோதனை செய்து பார்ப்பதில் சுலபமான, சிரமமில்லாத பல வழிகள் இருப்பதாகப் பிள்ளைப் பேறு மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சோதனை செய்து பார்ப்பது சென்டி மீட்டர் கொள்ளளவில் சுமார் ஆறு கோடிலிலிருந்து ஓன்பது கோடிகள் இருக்கவேண்டும் என்பது மருத்தவ வில் இது இல்லை என்றால் குழந்தைப்பிறப்புக்கு ஆண்களால் உருவி செய்வது கடினம் இந்தக் குறை ஆண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது
விருக்தி உறுப்புக்கள்! அடைந்திருக்கின்றனவா இல்லையா என்பதை ஆ உறுப்பைப் பார்த்து டாக்டர்கள் அறிந்துகொள்வார்கள், போதுமான வளர்ச்சியும் கிளர்ச்சியும் இல்லை. என்றால். குழந்தக்காக.ஆயிரம் முயற்சி செய்தலும் செலிப்பதில்லை. அருவிகன் ஆரோக்கியமாக இருந்தால் குறைபாடுகள் தோன்றுவதில்லை. கருவிகள் பாதிக்கப்பட்டால் செயல்களும் பாதிப்புக்கு ஆனாகின்றன,
ஓர் ஆண் கருவும், மற்றோரு பெண் கருவும் ஒன்று கலந்தால்தான் குழந்தை பிறக்க முடியும். இது தெரிந்த விஷயம். ஆண் கருவை உற்பத்தி செய்யும் உயிரணுக்குச் சில தகுதிகள் உண்டு. உயிரணுக்கள் செழுமையாக இருக்க வேண்டும்ஆண் அணுக்களில் சில வலுக் குறைந்தும். வால் இல்லாமலும் இருப்பதுண்டு. ஆண் அணுக்கள் நீந்திச் சென்று பெண் அணுக்களை அடைய வேண்டும். நீந்த முடியாத அணுக்கள் அமைந்திருந்தால் ஒன்றோடொன்று எப்படி இணைய முடியும்?
உயிரணு வெளியே வந்தால்தான் பெண் உயிரணுவைச் சந்திக்கமுடியும், சந்திக்க முடியாதடி சதை வளர்ச்சியடைந்து சிலருக்குத்தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இந்தக்தடைகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம்.
ஆண்களின் மலட்டுத்தனத்திற்குக் காரணம் பல உண்டு. குடும்பச் சூழ்நிலைகள். இளமைக் காலத்தில் வந்த நோய்கள் இவற்றை அறிந்து கொண்டு ஆண்களின் மலட்டுத்தனத்தைப் போக்கலாம். இரத்தச் சோதனை உயிரணுச் சோதனைகள் மூலம் உடலின் குறைபாட்டை அறிந்து அதற்குப் பரிகாரம் தேடலாம்.
தைராய்ட் சுரப்பிகளும், பிட்யூட்டரி சுரப்பிகளும் போதுமான அளவில் ஹார்மோன்களைச் சுரக்காவிட்டால் அது பீஜங்களை (Testis) பாதிக்கும். உயிரணுவற்றிவிடும். பீஜங்களை ஊக்குவிக்கச் சில ஊசி மருந்துகள் உண்டு தைராய்டு ஊசிகளும் போட்டுக் குறைகளை நீக்குகிறார்கள்.
குழந்தை இல்லாத குறைபாடுகள் உள்ளவர்கள் யூராலஜிஸ்ட் என்ற வைத்திய நிபுணர்களிடம் சோதனை செய்துகொண்டு தங்கள் குறைகளைப் போக்கிக் கொள்ளலாம்.
இரண்டு நாள், மூன்று ல் என்று முடிவு கிறோம். இதற்கு சிறுவயதில் பொண்ணுக்குவீங்கி புட்டாலம்மை என்ற மம்ஸ் நோய் பீஜத்தில் வீக்கம் ஏற்படுத்தி இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படலாம். இது தவிர, டைபாய்டு.டி.பி.
நீரிழிவு, இரகசிய நோய், தொழு நோய்களும் மலட்டுத்தனமும் உண்டாகக் காரணங்கள். புற்றுநோய் நரம்பு நோய், சோகை நோய், ஆண்மைக் குறைவு காரணமாகவும் குழந்தை பிறப்பதில் தடை இருக்கலாம். கல்லீரல் பாதிக்கப்பட்டால் மலடு ஏற்பட வாய்ப்புண்டு.
ஆகவே உடம்பில் எந்தக் குறை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்து அந்தக் குறையைப் போக்கிவிட்டால் மலட்டுத்தனத்திற்குச் சீட்டுக் கொடுக்கலாம்.
ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்குமுன் தங்கள் உடலின் குறைபாடுகளைச் சோதனை செய்து கொண்டு திருமணத்திற்குத் தங்களைத் தகுதி படைத்தவர்களாக மாற்றிக் கொள்ளலாம். ஆண்மைக் குறைவுகளை ஆரம்ப காலத்திலிருந்தே போக்கிக் கொண்டு வந்தால் திருமணத்திற்கு பிறகு ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறலாம்,
நூற்றுக்குத் தொண்ணூறு பேர்களின் குறைகள் திரந்தரமானவை அல்ல. அவற்றை நீக்க எத்தனையோ வழிகள் உண்டு. முயன்று பார்ப்பதில் தவறில்லையே!
Comments
Post a Comment