Skip to main content

Posts

Showing posts from July, 2022

Google ads

செவித்துணைக் கருவிகள் என்றால் என்ன ?செவித்துணை கருவிகளின் அவசியம் -Medical Tamizha

செவித்துணைக் கருவிகள்  மனிதர்களுக்கு ஏற்படும் உடல் குறைகளை, உடல் உறுப்புக்களில் உண்டாகும் ஊனங்களைச் சரிசெய்து   மீண்டும் இயங்கவைக்க விஞ்ஞானிகள் புதியபுதிய கருவிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்கள். கண்பார்வைக் குறைவானவர்களுக்குக் கண்ணாடியும், வாய்ப் பற்கள் இழந்தவர்களுக்குச் செயற்கைப் பற்களும். கை, கால் இழந்தவர்கள் நட மாட, செயல்பட செயற்கைக் கை, கால் ஊன்றுகோல் போன்ற துணைக் கருவிகளைத் தயாரித்து உடலோடு பொருத்தி ஊனங்களை, குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றனர். இதுபோல் காது கேளாதவர்களுக்கும் செவித் துணைக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுக் காதுகளில் பொருத்தி மற்றவர்களைப் போல் அவர்களும் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள், மனிதனுக்கு எந்தக் குறை இருந்தாலும் அதைப் போக்க விஞ்ஞானம் அற்புதமான செயற்கை உறுப்புகளை உருவாக்கிச் சாதனைகள் பல செய்து வருகிறது. செவித் துணைக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதில் செலவு கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர மனிதர்களின் மனக் குறைகள் இப்போது குறைந்து கொண்டு வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒலிகளைக் கிரகிக்கு...

சரிவிகித உணவு என்றால் என்ன ? சிறந்த உணவு எது ? Medical Tamizha

 சிறந்த உணவு என்று சொல்லும்போது குழந்தைகளுக்குத் தாய்ப் பால் தான் குழந்தைப் பருவத்தில் சிறந்த உணவாகிறது. தாய்ப் பாலில் நோய்த் தடுப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. ஆகவே நோய் வராமல் தடுக்கக் குழந்தைக்குத் தாய்ப் பாலைத் தவிர வேறு சிறந்த உணவு கிடையாது. தாயின் மூலமே குழந்தைக்கு உணவு கிடைப்பதால் தாய் சிறந்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். தாயின் உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து தேவையான அளவில் இருந்தால் குழந்தை நல்ல எடையுடன் பிறக்கும். பிறக்கும் குழந்தையும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பிறக்கும். இதையும் படிக்க : குளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பிறந்த குழந்தையை மருத்துவமனைகளில் முதலில் எடை போடுகிறார்கள். குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால் தாய்க்குச் சர்க்கரை வியாதி இருக்குமோ என்று சந்தேகித்துச் சோதனை செய்வதுண்டு.  இரண்டு கிலோ எடைக்கும் குறைவாக இருந்தால் குழந்தையை உன்னிப்பாகக் கவனித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தை பிறந்த பத்து நாட்களில் குழந்தையின் எடை குறையும். உடம்பிலுள்ள நீர்ச் சத்துக் குறைவதால் எடை இழப்பு ஏற்படலாம். இ...

மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது ? தடுப்பது எப்படி ? Medical Tamizha

 மூச்சு விடுதல் என்பது எந்தவிதச் சிரமும் இல்லாமல் சலனம் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் நாம் உணராமல் இந்தநிகழ்ச்சி பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடந்து கொண்டு வருகிறது. பெருமூச்சு விடும்போது மட்டும் நெஞ்சு விம்முகிறது. அதிக அளவு காற்று உள்ளே இழுக்கப்பட்டு அதிக அளவு காற்று வெளியே தள்ளப்படும் போது ஒருளிதச் சலனம் ஏற்படுவதை உணர்கிறோம். மற்ற நேரங்களில் மூச்சு தன்னிச்சையாகச் செயல் படுகிறது. ஆனால் மூச்சுத் திணறல் என்பது அப்படி அல்ல. சாதாரணசுவாசத்தைவிட வேறு பட்டது வித்தியாசமானது. சற்று சிரமத்தையும் தருவது. மிஞ்சினால் ஆபத்து உண்டு. ஒரு நிமிஷத்திற்கு 16 முதல் 20 தடவை மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம் என்று விஞ்ஞானிகள் அளந்து கூறுகிறார்கள். இந்த எண்ணிக் கைக்குமேல் போகும்போது அது திணறல் எனப்படுகிறது. இருதய நோயாளிகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், மூச்சுத் திணறலால் அதிகமான சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.  மூச்சுத் திணறல் என்பது நோய் அல்ல. நோயின் அடையாளமே சில நோய்கள் உடலைத் தாக்கும் போது மூச்சுத் திணறல் அதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. குழந்தைகள், பெண்கள். ஆண்கள், வயதானவர்...

நீரிழிவு நோய் என்றால் என்ன ? அதன் பாதிப்பு மற்றும் தடுக்கும் வழிமுறை - Medical Tamizha

 சில நோய்களுக்கு உலகப் புகழ் உண்டு. நீண்ட சரித்திரமும் உண்டு. அப்படித் தோன்றிய நோய்களுள் ஒன்று நீரிழிவு. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த நோயைக் கண்டு பிடித்து அதற்குப் பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். இதற்கு  (  டயாபெடிஸ் மெலிட்டஸ் ) என்று பெயர் வைத்தவர் அரிடாய்ஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி. டயாபெடிஸ் என்பது கிரேக்கப் பெயர். இதிலிருந்து நீரிழிவு நோய் நீண்ட காலப் புகழ்பெற்ற நோய் என்று தெரிகிறது. உலகத்தில் 25 கோடி மக்கள் இந்த நீரிழிவால் தூண்டப்பட்டு இப்போது இன்சுலின் என்ற மருந்தால் ஓரளவு நோயைக் கட்டுப் படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். நீரிழிவு என்றால் என்ன என்பதை இப்போது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு இந்த நோயாளிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப் படாத குடும்பங்கள் அபூர்வம்.  இரைப்பைக்குப் பின்னால் நாக்கு வடிவத்தில் ஓர் உறுப்பு இருக்கிறது. இந்த உறுப்பு பைக்குக் கனையம் (ஆங்கிலத்தில் பாங்கிரியாஸ் ) என்று அழைக்கிறார்கள். இந்த உறுப்பிலிருந்து இரண்டு வகைத் திரவங்கள் சுரக்கின்றன. ஒன்றிற்குப் பெயர் கணைய நீர். இதைக் க...

தாய் பால் நல்லதா ? புட்டி பால் நல்லதா ? குழந்தை ஆரோக்கியத்திற்கு ?

 WHO என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில உலகச் சுகாதார நிறுவனத்திற்கும். டின் பால், புட்டிப் பால் தயாரிக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் இடையில் இப்போது ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டும் செயற்கைப் பாலுணவைக் கட்டுப் படுத்த உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாய்மார்களின் உள்ளங்களில் ஒரு தவறான எண்ணத்தை குழந்தைப் பால் தயாரிப்பாளர்கள் சிலர் பத்திரிகை, சினிமா விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள். தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலே புஷ்டி அளிப்பது, ஆரோக்கியம் அளிப்பது என்றெல்லாம் கருத்தைப் பரப்பிப் பாலுணவு விற்பனை மூலம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் தேடி வருகிறார்கள். இந்திய அரசு, டின்களில் விற்பனை செய்யும் குழந்தைப் பால் உணவை நான்கு மாத குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப் பாடும் விதித்திருக்கிறது. புட்டிப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு அப்படி என்ன கெடுதல்கள் ஏற்படுகின்றன? என்ற உண்மையை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  விளம்பரத்தால், வியாபாரத் தந்திரத்தால் தாய்ப் பாலின் சிறப்பைத் தெர...

காது மந்தத்திற்கு என்ன காரணம் ? சரி செய்வது எப்படி?

 ஒலிகள் எந்தத் திக்கிலிருந்து வந்தாலும் அதைக் கேட்பதற்கே மனிதனுக்கு இரண்டு காதுகள் படைக்கப் பட்டிருக்கின்றன. இலை அசைவிலிருந்து உண்டாகும் ஒலி முதல், இடி முழக்கத்திலிருந்து உண்டாகும் ஒலிவரை. இந்தக் காதுகள் கேட்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. ஆனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளைப் போலக் காதிற்கும் சில காரணங்களால் கேடுவிளைகின்றது. இதனால் ஒலிகள் முழுமையாகக் கேட்கும் திறன் குறைந்து காதுகள் மந்தமாகின்றன. நம் நாட்டில் 100க்கு 35 பேர் காது மந்தம் உள்ளவர்களாகவும் 100க்கு ஐந்து பேர் முழுச் செவிடாகவும் வாழ்கிறார்கள். காதிருந்தும் செவிடர்களாய் வாழும் நிலை பலருக்கு ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்?  நாகரிகமான வாழ்க்கை பலருக்கு நன்மையைத் தந்திருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அதே விஞ்ஞானத்தின் விளைவால் சில தீமைகளையும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம் என்று விஞ்ஞானிகளே சொல்லுகிறார்கள். 60 வயதுக்கு மேல் உண்டாகும் காதுக் கோளாறுகள் எல்லாம் இப்போது 20 வயதுக் காரர்களுக்கு உண்டாகிறது. என்கிறார் மேற்குஜெர்மன் மருத்துவ டாக்டர் ப்ளெஸ்டர். ஒலி பெருக்க...

ஹார்மோன் கோளாறு என்றால் என்ன? அதை போக்கும் வழி?

 நாம் வாழ்க்கையில் கொரில்லா போன்ற தோற்ற முடைய சிலரைப் பார்க்கிறோம். கரடி போல் ரோமம் நிறைந்த சில உருவங்கள். பனைமரம் போல் உயரமாக வளர்ந்த மனிதர்கள். வளர்ச்சி இல்லாத உருவங்கள். கரிய நிறம். சிவந்த நிறம் கொண்ட ஆண் பெண் உருவங்கள். ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்ற இரண்டுங்கெட்ட மனிதர்கள். மார்பு வளர்ச்சி இல்லாத பெண்கள். பெண் போல் மார்பு வளர்ச்சி பெற்ற ஆண்கள். மீசை உள்ள பெண்கள். முடியில்லாத புருவங்கள். எப்போதும் கை கால்களில் வியர்வை கொட்டும் மனிதர்கள். ஆண்மை இல்லாத ஆண்கள். பெண்மை இல்லாத பெண்கள். விழி பிதுங்கிய ஆந்தை மனிதர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ வித உடல்நலம், மன நலம் சரியில்லாத ஆண் பெண்களையெல்லாம் வாழ்க்கையில் சந்திக்கிறோம். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறுகளுக்கு ஒரு பின்னணி இருக்கிறது என்பதை மட்டும் அறிவோம். ஆனால் விரிவாகத் தெரிவதில்லை. இவற்றை ஹார்மோன் கோளாறுகள் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.  Hormones என்றால் என்ன?  நம் உடலில் சுரக்கும் சில நீர்களில் இரசாயனக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்திருக்கின்றன. இவை உடலில் பல பாகங்களில் உற்பத்தியாகி இரத்தத்துடன் கலந்து சில உறுப்புக்...

இடுப்பு பிடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 உடல் பாரத்தைத் தாங்குவது இடுப்பு:  இந்த இடுப்புப் பகுதியில் 33 க்கு மேற்பட்ட எலும்புகளும், தசை நார்களும், இரத்த நாளங்களும், அதன் கிளைகளும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றுள் ஏதாவது பாதிக்கப்பட்டால் முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகள் தோன்றுகின்றன. இந்தப் பகுதியில் தோன்றும் வலிகளை உண்டாக்கும். நோய்க்கு லம்பாரேக் என்று பெயர். ஈரத்தில் அதிகமாக நடமாடுவதாலும், கடிஎமாக உழைக்கும்போது உடல் மீது குளிர்ந்த காற்றுப் படும் போதும், இருமல், தும்மில் ஏற்படும் போதும், விபத்தில் சிக்கி இடுப்பில் அடிபடும்போதும், வாயு வேகத்தைக் கிளப்பிவிட்டு விடுகிறது. இதனால் இடுப்பில் பிடிப்பும், வலியும் உண்டகின்றன. கோணல்மாணலாக உட்காருபவர்களுக்கும் தலையை சாய்த்துக் கொண்டு உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும்.,இரத்தம் உடலெங்கும் சரிவரப் போய்ச் சேராதவர்களுக்கும். இடுப்பு வலிகள் வரலாம்.  இடுப்பு எலும்புகள், நரம்புகள், தசைகள், இரத்த நாளங்கள் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் கோளாறுகளால் அழுத்தப்படும்போது கழுத்து வலி, முதுகுவலி, இடுப்புவலி ஆகியவை ஒன்றையடுத்து இன்னொன்று வரும். இந்த மூன்றும் சங்கிலித் தொடர்கள் போல நடு முதுகு எ...