ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி மாதத்தில் இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை விநாயகர் சதுர்த்தி திருநாளாகும். விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? விநாயகர் சதுர்த்தி திருநாளானது பண்டைய மன்னர் சத்ரபதி சிவாஜி ஆட்சி காலத்திலேயே கொண்டாடப்பட்டு வந்தது.இருந்தாலும் அது அனைவரும் அறியும்படி பிரபலமாகவில்லை. இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவர் பால கங்காதர திலகர். இந்து மதத்தின் மீது பால கங்காதர திலகர் கொண்டிருந்த ஈர்ப்பால் விநாயகர் சதுர்த்தியை பிரபலமான விழாவாக மாற்றியவர். 1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற மக்கள் விழாவாக பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மிகப்பெரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர். புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப்
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,