சின்-சான் பற்றி அறிந்திராத சில தகவல்கள் ( shinchan Tamil )
க்ரேயான் ஷின்-சான் யோஷிடோ உசுய் என்பவரால் எழுதப்பட்டு விளக்கப்பட்ட ஜப்பானிய மாங்கா தொடர். க்ரேயான் ஷின்-சான் 1990 இல் ஃபுடாபாஷாவால் வெளியிடப்பட்ட வீக்லி மங்கா ஆக்ஷன் என்ற ஜப்பானிய வார இதழில் தோன்றினார். எழுத்தாளர் யோஷிடோ உசுய் இறந்ததால், மங்கா அதன் அசல் வடிவத்தில் செப்டம்பர் 11, 2009 அன்று முடிவடைந்தது. 2010 ஆம் ஆண்டு கோடையில் உசுயின் குழு உறுப்பினர்களால் புதிய மங்கா தொடங்கியது, நியூ கிரேயன் ஷின்-சான்
2022 ஆம் ஆண்டில் அதன் 30 வது வருடத்தைத் தொடர்ந்து ஒளிபரப்பும் வகையில், 1992 ஆம் ஆண்டில் அனிமேஷன் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தழுவல் TV Asahi இல் ஒளிபரப்பத் தொடங்கியது மற்றும் இன்னும் உலகம் முழுவதும் பல தொலைக்காட்சி நெட்வொர்க்குகளில் தொடர்கிறது மற்றும் 1000 அத்தியாயங்களுக்கு மேல் உள்ளது. இந்த நிகழ்ச்சி 30 மொழிகளில் டப் செய்யப்பட்டு 45 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.
Interesting Facts About Shinchan :
- சின்சான் முழுப்பெயர் "ஷின்னோசுகே ஷின் நோஹாரா" மற்றும் "சின்சான் என்பது ஷிஞ்சனின் புனைப்பெயர்.
- சின்சான் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யோசி டோ.சின்சான் என்ற கதாபாத்திரம் முதல் முதலில் 1990 ஆம் ஆண்டு வார இதழில் காமிக் தொடராக வடிவில் வெளியிடப்பட்டது.
- அதன் பிறகு 1992 ஆம் ஆண்டு சின் சான் என்ற தொடர் ஜப்பானில் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. சின்சான் தொடர் இதுவரை 940 எபிசோட்கள் உள்ளது.
- ஜப்பானின் இந்த சின்சான் தொடர் மிகவும் பிரபலமடைந்தது எடுத்துக்காட்டாக : அங்கு ஓடும் ஒரு ரயிலில் இந்த சின்-சான் தொடரின் படத்தை முழுமையாக ரயிலில் மேல் ஒட்டியுள்ளனர்.
- சின் சான் தொடரை வேறு மொழியில் காண்பதை விட ஜப்பான் மொழியின் காண்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர். ஏனெனில் இது மற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது இதில் உள்ள சில காட்சியினை நீக்கி விடுவார்கள்.
- இந்த சின்-சான் தொடரை தமிழில் மொழி பெயர்த்தவர் ரகுவரன்.
- சின்-சான் தொடர் முதல் முதலில் இந்தியாவிற்கு கார்ட்டூன்னாக வந்த ஆண்டு 1994 ஆகஸ்ட் மாதம் ஆகும்.
- இந்த சின்சான் கார்ட்டூன் தொடரை இந்திய அரசு அக்டோபர் 2008 ஆம் ஆண்டு தடை செய்தது அதன் பிறகு இந்தத் தொடரை சிறு திருத்தங்களுடன் குழந்தைகளை பாதிக்கப்படாத அளவில் திருத்தங்களுடன் வெளிவந்தது.
- தற்போது ஜப்பானில் சின்சான் கிட்டத்தட்ட 28 படங்கள் வெளியாகியுள்ளது.
சின்-சான் ஐ பற்றி சில குறிப்புகள் :
பெயர் சின்-சான் நோ காரா சின்-சான் வயது 5 மே 5 ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ஆரி நோகரா, தாய் பெயர்: மிக்ஸி நோகரா. சின்சான் படிக்கும் பள்ளி: புட்டாபா கிண்டர் கார்டன். சின்-சான் நீண்ட கால்கள் கொண்ட வயது வந்த பெண்களுடன் ஊர்சுற்ற விரும்புவான்.
Comments
Post a Comment