Skip to main content

Google ads

10 Pregnancy Symptoms In Tamil - Medical Tamizha

Pregnancy Symptoms In Tamil :

இந்தப் பதிவில் பொதுவாக பெண்களுக்கு வரும் கர்ப்ப அறிகுறிகளை பார்க்கப்போகிறோம். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிகுறிகளும் அனைவருக்கும் வராது, ஆனால் இதில் ஒரு சில அறிகுறிகள் உங்களுக்கு வந்திருக்கும்.

இந்தப் பதிவில் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக வரும் 10 அறிகுறிகளை (Pregnancy Symptoms) கீழே குறிப்பிட்டுள்ளேன்.

pregnancy symptoms in tamil
Pregnancy doubts in tamil

கர்ப்பம் அறிகுறிகள் | 10  Pregnant Symptom in Tamil

இந்த அறிகுறிகள் எல்லாம் கண்டிப்பாக ஆறு வாரம் முதல் 8 வாரத்திற்குள் கண்டிப்பாக காணப்படும்.

1. மாதவிடாய் தள்ளிப் போகுதல்

நீங்கள் கருவுற்றால் கண்டிப்பாக உங்கள் மாதவிடாய் தள்ளி போகும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்றாள் கண்டிப்பாக வரும். இந்த அறிகுறி கருவுற்ற அனைத்து பெண்களுக்கும் வரும் அறிகுறி ஆகும்.

2.வாசனை உணர்வு அதிகரித்தல்

கருவுற்ற பெண்களுக்கு வாசனை உணர்வு அதிகமாக இருக்கும். ஏதாவது நல்ல நறுமணம் உங்களுக்கு காணப்பட்டால் அதில் உங்களுக்கு அந்த நறுமணம் அதிகமாக இருக்கும்படி உணர்வீர்கள் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியம் ஆனது திடீரென்று உங்களுக்கு அதிக நறுமணம் போன்று நீங்கள் உணர்வீர்கள்.

3.சுவை மாறுதல்

நீங்கள் கருவுற்று இருந்தால் நீங்கள் சாப்பிடும் உணவின் சுவை மாறியது போல் உங்களுக்கு தோன்றும். உங்களுக்கு முன்பு பிடித்த உணவு கருவுற்று இருந்தால் உங்களுக்கு பிடிக்காமல் போல் தோன்றும். இந்த அறிகுறியானது நீங்கள் கருவுற்று இருக்கும் வரைதான் இருக்கும் அதன் பிறகு இந்த அறிகுறியானது உங்களுக்கு சரியாகிவிடும்.

4.வயிற்று வலி

உங்கள் அடி வயிற்று பகுதியில் வலி இருந்துகொண்டே இருக்கும் நீங்கள் மருந்துகள் எடுத்தாலும் அந்த வலியானது சரியாக ஆகாமல் இருக்கும் அப்படி இருந்தாலும் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வயிற்று வலியானது உங்களுக்கும் கடுமையாகவும் இருக்காது மற்றும் உடனடியாகவும் நிற்காது. இந்த வழியானது உங்களுக்கு தொல்லை கொடுக்காத அளவில் மிதமாக இருக்கும் இந்த வலியானது தொடர்ந்து இருக்கக்கூடும்.

5.உடல் சோர்வு

நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு உடல் சோர்வு அதிகரிக்கும். அதாவது நீங்கள் படித்தால் இருந்திருக்க முடியாது மற்றும் நீங்கள் சராசரியாக செய்யும் வீட்டு வேலையைக் கூட செய்ய முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு வலிக்க கூடும் மற்றும் சோர்வாக இருக்கும்.

6.முதுகு வலி

உங்களுக்கு முதுகு முதல் இடுப்பு வரை கடுமையான வலி ஏற்படும். இந்த முதுகு வலியானது கருவுற்ற அறிகுறிகளில் ஒன்று. இந்த முதுகு வலி கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும்.

7.கால் வலி

இந்த கால் வலியானது அனைத்து பெண்களுக்கும் மற்றும் அனைவருக்கும் வரும்.ஆனால் இந்த கால் வலியானது கருவுற்ற பெண்களுக்கும் வரக்கூடிய அறிகுறிகளில் ஒன்று தான்.

8.குமட்டல் மற்றும் வாந்தி

பொதுவாக அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். இந்த அறிகுறி ஆனது அனைத்து கருவுற்ற பெண்களுக்கும் பொருந்தும் மற்றும் அடிக்கடி தலை சுற்றுதல் போலவும் இருக்கும். இந்த அறிகுறிகளும் நீங்கள் கருவுற்றால் வரும்.

9.அடி வயிறு உப்புதல்

உங்கள் வயிற்று பகுதியில் அதிலும் குறிப்பாக அடிப்பகுதியில் உப்பி இருப்பது போல் இருக்கும் ஆனால் உங்கள் மேல் வயிற்றுப் பகுதியானது சாதாரணமாக ஒட்டியிருக்கும்.

நீங்கள் உங்களை அறியாமல் உங்கள் கைகள் உங்கள் அடிவயிற்றை தடவிக் கொண்டே இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தாலும் நீங்கள் Pregnant என்பதற்கு அர்த்தமாகும்.

10.தலைவலி

நீங்கள் கருவுற்று இருந்தால் அடிக்கடி உங்களுக்கு தலை வரைக்கும் இந்த தலைவலியானது கடுமையாகவும் மற்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த அறிகுறி அனைத்து மக்களுக்குமே வரும் ஆனாலும் இந்த அறி குறியும் கருவுற்ற பெண்களுக்கும் பொதுவாக வரக் கூடியது ஆகும்.

Pregnancy Symptoms In Tamil Conclusion - 

இந்த பதிவு உங்களுக்கு உபயோகம் உள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள 10 பொதுவான அறிகுறிகள் உங்களுக்கு எது வந்துள்ளது மற்றும் எது வந்திருக்கிறது என்று கீழே கமென்ட் பாக்ஸில் கூறுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...