08-09-2022 இன்றைய தேதிக்கான ராசி பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
---------------------------------------------------------------------------
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
---------------------------------------------------------------------------
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.
---------------------------------------------------------------------------
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கை கூறிவிட்டு கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.
Comments
Post a Comment