Skip to main content

Google ads

மூளையை தாக்கும் மூன்று நோய்கள்- தடுக்கும் வழிமுறைகள்

 வெப்பம் மிகுந்த நாடுகளில் இளம் பருவத்தினரை என்-சபாலிடிஸ், மெனிங்கெடிஸ், என்சபாலோ மெனிங்கெடிஸ், என்ற மூன்று நோய்கள் மூளையைத் தாக்கிப் பலரைச் சோதனைக்குள்ளாக்குகிறது.என் - சபாலிடிஸ் என்ற நோய் மூளையின் இரு அரைக் கோளங்களை மட்டும் தாக்குகிறது.

மெனிங்கெடிஸ் என்பது மூளையிலுள்ள மெல்லிய உட்புறத் தோலைத் தாக்குகிறது.என்-சபாலோ மெனிங்கெடிஸ் என்பது மூளையுடன் இணைந்த முதுகெலும்பைத் தாக்குகிறது.

இந்த மூன்று நோய்களுக்கும் ஏறக்குறைய ஒரே அடையாளங்கள் தோன்றுகின்றன.

குளிர் ஜூரம் உண்டாகும். தலைவலி உண்டாகும். அதிகமான அசதியோடு தூக்கம் ஏற்படும். ஞாபக சக்தியை இழந்து விடுவார்கள்.




இன்று என்ன கிழமை, என்ன தேதி, என்ன சாப்பிட்டோம் என்பவை கூட மறந்து விடும். எதற்கெடுத்தாலும் கிடுசிடுவென்று எரிச்சல் அடைவார்கள். உடம்பில் நடுக்கம் ஏற்படும். 

கழுத்தில் விறைப்பு உண்டாகும். ஒருவகைப் பயம் உண்டாகும். சில சமயங்களில் குமட்டலும் வாந்தியும் உண்டாகும்.

மூளையைத் தாக்கும் இந்த மூன்று நோய்களுள் எது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அனுபவமுள்ள டாக்டர்கள் தான் கண்டு பிடிக்க முடியும்.

இந்த நோய்கள் எப்படித் தோன்றுகின்றன? பண்டையில் ஒருவிதமான விறைப்பு உண்டாகிறது.

மூளைக்குள் கோராய்டு என்று சொல்லப்படும் பள்ளங்கள் நிறைய உண்டு. இவற்றில் சுரக்கும் ஒருவகைத் திரவம் மூளை முழுவதும் பரவுகிறது. மூளையில் உண்டாகும் அதிர்ச்சிகளைத் தாங்க இந்தத் திரவம் உதவுகிறது.

மூளை நோய்கள் தாக்கும்போது இந்தத் திரவம் அதிகமாக உற்பத்தியாகிறது. இந்தத் திரவத்தை ஈர்க்கும் சத்தியை மூளை இழந்துவிடுவதால் இதுபோன்ற அசம்பாவிதக் கோளாறுகளைத் தோற்றுவிக்கிறது.

மூளை நோய்களில் கொடூரமானது என் சபாலிடிஸ் என்பதுதான். இந்த நோயில் தாக்குண்டவர்கள் மீள்வது கடினம் என்று சொல்லுகிறார்கள்.

மெனிங்கெடிஸ் காய்ச்சலில் நரம்புகள் பாதிக்கப் படுவதால் பாரிச வலிப்பு உண்டாகலாம். நோய் முற்றி விட்டால் மனநோயாளியாக ஆகவேண்டிவரும்.

மூளை நோய்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பரவுகின்றன.  அர்போவிரஸ் என்ற கிருமிகளால் இந்த நோய் வலுப் பெறுகிறது. அர்போவிரஸ் கிருமிகளில் 200 வகைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள் பன்றிகளும், கொசுக்களும் இந்தக் கிருமிகளும் வாகனங்கள், இவை மூலமே மெனிங்கெடிஸ் நோய் பரவுகிறது.

பன்றி மாமிசம் அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நோய் வரலாம். பெரும்பகுதி கொசுக்களே இதற்குக்காரணம், கொசுக்களை விரட்டியடித்தால் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.

வைட்டமின் பி-1, பி-6, பி-12, வைட்டமின் சி. நிக்கோடினிக் அமிலம், பாலிக் அமிலம் இதன் சத்துக்கள் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுகிறவர்களுக்கு மூளை நோய்கள் உண்டாகலாம். இந்த நோய் வராமல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகளிடம் விசித்திரமான போக்குத் தோன்றினால் உடனே மனநோய் மருத்துவர்களிடம் கொண்டு செல்லுங்கள். உடம்பைச் சோதித்து மூளை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்துச் சிகிச்சை செய்வார்கள்.

ஆரம்பத்திலேயே இந்த நோயைக் குணப்படுத்தலாம். மூளை நோய்க்கு மூளையில் ஏற்படும் திரவத்தால் தொந்தரவு ஏற்படுவதால் திரவத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்துகிறார்கள்.

கட்டியாக இருந்தால் ஆபரேஷன் செய்யலாம். கட்டியால் மூளை நோய் உண்டாவதில்லை. இதனால் மெனிங்கெடீசுக்கு அறுவை சிகிச்சை எதுவும்

இல்லை. மூளையைப் பாதிக்கும் இந்த மூன்று நோய்களை வரவொட்டாமல் தடுக்க விடும் வெளியும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்களால் தீமை உண்டாவதால் கொசுக்களை அணுக விடாமல் பார்த்துக் கொள்ளக் கொசுவலை கட்டிக் கொண்டு படுப்பது நல்லது. மனிதனுக்கு மூளை மிகவும் முக்கியம். அது

பாதிக்காதபடி பாதுகாப்பது எல்லோருடைய கடமை. குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதால் பெற்றோர் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...