Skip to main content

Google ads

சிறுநீர் கழிப்பதில் சிரமமாக இருக்கிறதா? தடுக்கும் வழிமுறைகள்

 சாதாரணமாகக் கோடை வெயிலில் வெளியே சுற்றி விட்டு வந்தால் உடம்பிலுள்ள நீர்ப்பகுதி சுண்டும்.எரிச்சலோடு சிறுநீர் கழியும்.இதை நீர்க் கடுப்பு என்று சொல்கிறோம்.

சிறுநீர் வெளிவருவதில் தாமதம் உண்டாகும். சிறுநீர் குறைவாக வெளியாகும். சிரமமும் ஏற்படும்.

ஆனால் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளி வருவதற்குச் சில கோளாறுகள் சிறுநீர்ப்பை என்று சொல்லப்படும் பிளாடரில் ஏற்படுவது தான் காரணம். இது பெரும்பாலும் ஆண்களுக்கே உண்டாகிறது.

அதிலும் சற்று வயதானவர்களுக்கே உண்டாகிறது என்பது டாக்டர்களின் சுணிப்பு.

சிறுநீர்ப் பையின் அடிப்பாகத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. இதைப் பிராஸ்டேட் சுரப்பி என்று சொல்லுகிறோம்.

இதன் வழியாகத்தான் ஒரு குழாய் சிறு நீரை வெளியே கொண்டுவருகிறது.

இந்த பிராஸ்டேட் சுரப்பி சில சமயங்களில் கிருமிகளின் தாக்குதலால் வீங்கிப் போய்ச் சிறுநீர்ப் பையின் வாயை அடைத்துவிடுகிறது.

இதனால் சிறுநீர் வெளியே வர முடியாமல் கடுப்புடன் சொட்டுச் சொட்டாக வருகிறது.ஒரு நாளைக்குச் சுமாராக 1.5 லிட்டர் வெளியேற் வேண்டிய சிறுநீர், இது போன்ற நீர்க் கடுப்புக்களால். பிராஸ்டேட் வீக்கங்களால், அடைப்பு ஏற்பட்டு 0.5 லிட்டர் ஆக வெளிவருகிறபோது சொட்டுச் சொட்டாக வெளிவருகிறது.

இதற்குக் காரணம் கிருமி நோயா?

ஆமாம்!  கிருமித் தொந்தரவால் கட்டியும். வீக்கமும் உண்டாகிறது. அடிக்கடி காய்ச்சல் உண்டாகும். அடி வயிற்றில் வலி இருக்கும். ஆரோக்கியமான உடல் என்றால் சிறுநீர் தங்கு தடையில்லாமல் சிறுநீர்க் குழாய் மூலம் பாய்ந்தோடி வரவேண்டும்.இதற்குத் தடை ஏற்பட்டால் சிறுநீர்ப் பையில் ஏதோ கோளாறு தோன்றி இருக்கிறது என்று அடையாளம்.

பெண்களுக்குக் கர்ப்பமான ஆறாம் மாதத்தில் வயிறு பெருத்துச் சிறுநீர்க் குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால்

நீர்ச் சுருக்கு நீர்க் கடுப்பு, நீர் அடைப்பு உண்டாகலாம். சிலசமயங்களில், சில காரணங்களால் நாமே சிறு நீரை அடக்கி வைக்கிறோம்.

பஸ், இரயில் பயணங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டும், நிலைமை இடம் கொடாததால் அடக்கி வைக்கிறோம்.இதனாலும் சில கோளாறுகள் ஏற்பட்டுச் சிறுநீர்ப் போக்குத் தடைப் படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், சிறுநீர்ப்பை பாதிப்பு ஏற்படுவதற்குப் பலமான காரணம் தேவை இல்லை. மூக்கிலும், தொண்டையிலும் உண்டாகும் நோய்கள்கூடச் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.சிறுநீரகக் கட்டிப் புற்று நோயாகவும் மாறலாம்.

டி.பி. நோயினால் பாதிக்கப்படலாம்.சிறுநீர்க் குழாயில் எந்த விதமான பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே சுவனிக்க வேண்டும்.

இதற்கு சிஸ்டோஸ் ஸ்கோப் என்ற ஒரு சோதனைக் கருவி இருக்கிறது. இந்தக் கருவியை சிறுநீர் உறுப்பில் செலுத்தி என்ன கோளாறு என்பதை டாக்டர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.'பிராஸ்டேட் பழுதுபட்டிருந்தால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுகிறார்கள்.

இவற்றிற்கு சல்பா மாத்திரைகள், ஸ்பரிடிம்,டெட்ராசின், அக்ரோமைசின், பாரா டான்டின் போன்றவை நல்ல பயனைத் தருவதாக டாக்டர்கள் எழுதிக்கொடுக்கிறார்கள்.

சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளி வருகிறது என்றால் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் அதிகமாகந் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வைட்டமின்-ஏ சத்துக் குறைவால் இம்மாதிரிக் குறைபாடுகள் பலருக்கு ஏற்படலாம். பால், தயிர், மோர், கேரட், பீட்ரூட், கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

தள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு. மிளகாய். மிளகு, பட்டை, இலவங்கம், சுடுகு இவை எரிச்சலைத் தூண்டும் சமையல் சரக்குகள், இவற்றைத் தள்ள வேண்டும்.

சிறுநீரகத்திற்கு அதிகமாகத் தொல்லை கொடுப்பவை இவை போன்ற காரப் பொருட்களே.சிறுநீரகம் மனித உடம்பில் ஒரு முக்கியமான வேலையைச் செய்யும் உறுப்பு. சிறுநீர்ப் பிரித்திகள் இரத்தத்தைச் சுத்தமாக்கி,அசுத்தத்தை வெளியேற்றும் முக்கிய அலுவல்களைக் கவனிக்கும் உறுப்பு.

இந்த உறுப்பு பாதிக்கப்படுமானால் உடலின் ஆரோக்கியமே பாதிக்கப்படடுவிடும். ஆகவே, சிறுநீர் தொல்லைதானே இது. இதனால் என்ன கெட்டுவிடப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விடாமல் உடனே கவனித்துச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...