Skip to main content

Google ads

பெண்களின் மாதவிடாய் காலத்தை சமாளிக்க சில பயனுள்ள குறிப்புகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

ருது என்றால் என்ன? அதன் உண்மை :

பெண்களின் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பமாகிறது என்பதன் முன்னறிவிப்புத்தான் ருது ஆவது. ருது என்றால் பருவம் என்று பொருள். ஒரு பெண் ருதுவாகிவிட்டால் இதற்தாக ஒரு விழாவே வீட்டில் நடத்தவது இந்தியப் பண்பாடு.

 ருது நிகழ்ச்சியை மங்களமாகக் கருதி அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களை அழைத்து என் மகள் பெரியவள் ஆகிவிட்டாள். திருமணம் செய்துகொள்ளும் தகுதியைப் பெற்றுவிட்டாள் என்று உற்றாருக்கும் ஊராருக்கும் மறைமுகமாக அறிவிக்கிறார்கள்.



ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் கர்ப்பப் பையிலிருந்து உடம்புக்குத் தேவை இல்லாத ஒன்று வெளியேறுகிறது, அசுத்தம் அல்லது கழிவுப் பொருள் என்று இதைச் சொல்லலாம்.

பெண்களின் உடல் நிலையைப் பொறுத்து, தட்ப வெப்ப நிலைகளைப் பொறுத்து, குடும்பவாகைப் பொறுத்துச் சில பெண்களுக்கு 11 வயதுக்கு மேல் 15 வயதிற்குள் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் வெளியேறும்போது அதிக வலியுடன் வெளியேறுகிறது. சிலருக்கு அதிக இரத்தப் போக்குடன் வெளியேறுகிறது.

மாதா மாதம் குறிப்பிட்ட தேதிகளில் இரத்த அசுத்தம் வெளியேற வேண்டும். சிலருக்கு இந்தத் தேதிகள் மாறலாம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே வெளியேறுவதும் உண்டு. ஆசு மாதம் ஒரு முறை எப்படியும் வெளியேற வேண்டும். இது தவறினால் உடலில் ஏதாவது கோளாறுகள் இருக்கலாம்.

பருவப் பெண்கள் மாதவிடாய் நாட்கள் வரும்போது கவலைப்படுகிறார்கள். அச்சப்படுகிறார்கள். 28 நாட்கள் என்பது 30 நாட்களில் ஏற்படலாம். மூன்று அவுன்ஸ் என்பதற்குப்பதில் ஆறு அவுன்ஸ் உதிரம் வெளியேறலாம். மூன்று நாட்கள் என்பதற்குப் பதில் ஆறு நாட்கள் நீட்டிக்கலாம். இதற்குக் காரணங்கள் உண்டு.

நோய் ஒரு காரணமாக இருக்கலாம். சிலருக்கு இரத்த சோகை நோய் இருக்கலாம். கொக்கிப் புழுவும் காரணமாக இருக்கலாம். டி.பி. நோயின் ஆரம்பக் கட்டமாக இருக்கலாம். இன்னும் சிலருக்குக் கிரந்தி நோயும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எந்தக் கோளாறு ஏற்பட்டாலும் ஒவ்வொரு மாதமும் கவனித்து வரவேண்டும். அதன் பிறகே முடிவு செய்ய வேண்டும். பெண்களாக முடிவு எடுக்கக் கூடாது. டாக்டர்கள் காரண காரியங்களை ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள். இதற்குமுன் அச்சமோ அதைரியமோ படக்கூடாது.

பருவப் பெண்களுக்கு சற்று வலி அதிகமாக இருக்கும். இதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இது இயற்கையாக ஏற்படும் வலிதான். பெண்களால் தாங்கிக் கொள்ள முடியும். 

இக் காலங்களில் இடுப்பில் வலி ஏற்படும். அடி வயிற்றில் வலி தோன்றும். பிறப்பு உறுப்புக்களில் வலி உண்டாகலாம். சிலருக்குத் தலைவலியும், சிலருக்கு வயிற்றுவலியும், கை கால் குடைச்சலும், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலிகளும் தோன்றும். வலியைக் குறைத்துக் கொள்ள ஓர் ஆஸ்பிரின் மாத்திரையை விழுங்கலாம். வலி குறையும்.

மாதவிடாய் உண்டாகவில்லை என்றால் சுத்தமான தண்ணீரில் சிறிது படிகாரத் தூளைப் போட்டுக் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்தால் அசுத்தம் வெளியேறிவிடும். தற்காலிகச் சாந்தி, உதிரச் சிக்கல் அதிகமாக இருந்தால் டாக்டரைச் சந்தித்து பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும்.

வலி குறையவேண்டும் என்றால் சூடான பானங்களைக் குடிக்கலாம். சுமாரான சூடு உள்ள வெந்நீரை வாளியில் ஊற்றிச் சிறிது நேரம் பாதங்களை அதில் வைத்திருந்தால் வலி போய்விடும்.

படுத்துக்கொண்டு ஓய்வு எடுப்பதால் வலி குறைந்து விடாது. எப்போதும்போல் வேலைகளைச் செய்துவர வேண்டும். சிரமமான வேலைகளைத் தவிர்க்கலாம். வயிற்றில் வலி இருந்தால் டைபைரோன் என்ற மாத்திரையை டாக்டர்கள் கொடுக்கிறார்கள். வலி குறைந்துவிடுகிறது.

இந்தக் காலங்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். உள் ஆடைகளைச் சுத்தமாகத் துவைத்து உடுத்தவேண்டும். வசதி உள்ளவர்கள் சானிடரி டவல்களை உபயோகிக்கலாம். 

இரும்புச் சத்து சில பெண்களின் உடம்பில் அதிகம் இருக்கலாம். இதனால் இவர்களுக்கு அதிகமாக உதிரப் போக்கு ஏற்படலாம். இதை நோய் என்று நினைத்து வேதனைப்படக் கூடாது. எந்தச் சிக்கல் ஏற்பட்டாலும் அதன் பின்னே ஒரு காரணம் இருக்கும். அந்தக் காரணத்தைக் கண்டுபிடித்துப் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும்.

என்னென்ன சாப்பிட வேண்டும்?

இக் காலத்தில் மிளகாய் காரம் மசாலா ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். உப்பின் அளவைக் குறைக்கவேண்டும். கொழுப்பை ஒதுக்க வேண்டும். சமையலில் வாழைப்பூவை இவர்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டும். வெங்காயக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். தேன், பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.

ஏதாவது டானிக் சாப்பிட வேண்டும் என்றுவிரும்பினால் ஹெபடோகிளோபின் என்ற டானிக் நல்லது.

இந்த அறிவுரைகள் எல்லாம் இளம் பெண்களுக்கு மட்டுமே! திருமணம் ஆனவர்களுக்கு வேறு சில யோசனைகள் கூறவேண்டும். அதை இன்னொரு சமயம் எழுதுவேன். மாதவிடாய். ஒரு பெண் கருத்தரிக்கத் தயாராகிவிட்டாள் என்பதன் மங்கள அறிவிப்பு! இளம் பெண்கள் இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, சாபமாக எண்ணக்கூடாது.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...