Skip to main content

Google ads

தொப்பையை குறைக்க மருத்துவ வழிமுறைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு மனிதனின் வாழ்வுக்கு அவனுடைய வயிறு ஓர் அளவுகோல். வயிற்றின் சுற்றளவு அதிகமாகப் போனால் வாழ்வு சுருங்கும் என்று ஒரு கணக்கு உண்டு.

அதாவது, தொந்தி, தொப்பை, பெருவயிறு உண்டாகாமல் பார்த்துக் கொண்டால் நீண்ட காலம் வாழலாம்.

பணவசதி படைத்தவர்கள் பலர் வயிற்றின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்கிறார்கள். வயிறு வீங்கவீங்க வாழ்வு சுருங்கிவிடும் என்ற பயமே இல்லாது வாழ்கிறார்கள். பணக்காரர்கள் சிலருக்குத்தான் பானை வயிறு என்றால், ஏழைகளில் சிலருக்கும் பானைபோல் வயிறு பெருத்துவிடும் காட்சியைப் பார்க்கிறோம்.

வயிறு பெருத்து போவதற்கு என்ன காரணம்?

சாதாரணமாகக் கொழுத்த உடல் உள்ளவர்களுக்குப் பெருத்த வயிறு அமையும். இதற்குக் காரணம் கொழுப்புச் சத்து அதிகமாக உடலில் சேர்ந்து அவர்கள் உழைக்க முடியாத சூழ்நிலையில் வயிறு மட்டும் பெரிதாகி விடும்.

 நடந்தால் மூச்சு வாங்கும். சோர்வும் களைப்பும் அதிகமாகிச் சோம்பலுக்கு இடம் தந்துவிடுகிறார்கள். வயிறே இவர்களை வாழ்க்கையில் செயலற்றவர்களாக ஆக்கி விடுகிறது.




இவை தவிர, தைராய்டு சுரப்பிக் கோளாறு காரணமாகவும் உடல் பருத்து, வயிறு பெருத்துச் சிலருடைய அழகைக் கெடுத்துவிடுகிறது.

உடல் பெருத்தவர்கள் இறைச்சிக் கொழுப்பு, முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், வனஸ்பதி. இனிப்புப் பண்டங்கள், கிழங்கு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டுச் சதையை வளர்த்து வயிற்றையும் பெருக்க வைத்து விடுகிறார்கள்.

பெரிய வயிறு சில நோய்கள் காரணமாகவும் உண்டாகிறது. அதில் முக்கியமான நோய் சிரோசிஸ் என்பது. ஈரல் கெட்டுப் போய் வயிற்றில் நீர் சுரந்து பெருவயிறு உண்டாகிறது. இதை மகோதரம் என்று சொல்லுகிறார்கள்.

 கெட்ட இரத்தத்தை ஈரலுக்கு எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் அழுத்தம் அதிகமானால் மகோதரம் என்ற பெருவயிறு நோய் உண்டாகிறது. இரத்தத்தில் புரதச் சத்துக் குறைவதும் ஒரு காரணம்.



உடம்பை விட்டு வெளியேறவேண்டிய உப்பும், நீரும் வயிற்றுறைக்கு வந்து சேர்வதால் வயிறு உப்பிவிடுகிறது. சிரோசிஸ் நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது.

பித்த நீர் தடைப்படுவதால் மஞ்சள் காமாலை தோய் ஏற்படுகிறது. இருதயம் சுருங்குவதால் கார்டியாக் சிரோசிஸ் என்ற இருதய நோய் உண்டாகிறது.

டி.பி. நோய், சிறுநீரகக் கோளாறு, ஈரலில் கட்டி, புற்று நோய் இவை எல்லாமே சிரோசிஸ் நோய் காரணமாக உண்டாகின்றன.

புரதச் சத்துக் குறைவாலும் வயிறு பெருப்பதும் உண்டு. மது அருந்துபவர்களுக்கும் வயிறு பெருக்கும். குடிப்பவர்களின் வயிறு பெரும்பாலும் பலூன் மாதிரி ஆகும்.



அடிக்கடி வயிறு உப்பலுக்குப் பல காரணங்கள் சொல்லப் படுவதால் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்க்க. வேண்டும். வயிற்றில் நீர் சேர்ந்துவிடுவதால் இந்தத் தொந்தித் தொல்லை உண்டாகிறது என்றால் வயிற்றிலுள்ள நீரை எடுத்துச் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாம். மண்ணீரல் வீக்கம், சிறுநீரசு வீக்கம் எது இருந்தாலும் அதை எக்ஸ்ரே மூலம் அறியலாம்.

சிறுநீரைச் சோதனை செய்தால் ஈரல் பாதித்திருக்கிறதா?

ஈரலில் கட்டி இருந்தாலும் லிவர்ஸ்கேன் மூலம் அறிந்துகொள்ளலாம்.வயிற்றில் பெரிடோனா ஸ்கோப் என்ற கருவி மூலம் உள் கோளாறுகளை அறியலாம். சோதனை மூலம் தெரிந்து கொண்ட பிறகு வைத்தியச் சிகிச்சையை ஆரம்பித்தால் எந்த மாதிரிக் கோளாறையும் நிவர்த்தி செய்து விட முடியும்.

பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறு காரணமாக வயிறு பெருக்கலாம். அடி வயிற்றில் வலியும் உண்டாகும். இதற்குப் பல மருந்துகள் உண்டு. 

கர்ப்பமானவர்களுக்கு வயிறு பெருக்கும். பிரசவம் ஆனவுடன் பழைய நிலை உண்டாகும்.

பிரசவத்திற்குப் பிறகு சிலருக்கு வயிறு பெருத்தே இருக்கும். இதற்கு பெல்ட் உண்டு. அதன் மூலம் வயிற்றைச் சமநிலைக்கு கொண்டுவந்து விடலாம்.

வயிறு பெருத்தவர்கள், நோயினால் வயிறு பெருத்திருக்கிறதா? அல்லது கொழுப்பு மிகுதியால் பானை வயிறு உண்டாகி இருக்கிறதா? என்று கண்டு பிடிக்க அவர்களின் தொப்புள் குழியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தொப்புள் குழி ஆழமாக இருந்தால் கொழுப்பு மிகுதி என்பதை உணரலாம். இதற்கு உணவுக் கட்டுப்பாடும். உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.

டாக்டர்கள் வயிற்றைத் தட்டிப் பார்த்தே இந்தக் கோளாறுகளை மேலோட்டமாகத் தெரிந்து சொல்லி விடுவார்கள்.

உடல் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வயிறு மிக முக்கியமான உறுப்பு. இதை வாடவிடவும் கூடாது. பெருக்கவும் விடக்கூடாது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...