Skip to main content

Posts

Showing posts from September, 2022

Google ads

இரண்டு பெண்களுடன் ஒரே கட்டிலில் இரவு முழுவதும் தூங்கிய ஆண் - medical Tamizha

 மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் காண்ட்வா மாவட்டத்துக்கு வேலை காரணமாக 35 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த ஹோட்டலில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் இரண்டு பெண்களில் ஒருவர் எதேச்சையாக கண்விழித்துள்ளார். அப்போது தாங்கள் உறங்கிய கட்டிலில் இன்னொருவர் யாரோ உறங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவர் ஒரு ஆண் என்பதை கண்டு அலறியுள்ளார். இதன் பின்னர் அந்த ஆண் உடனடியாக அந்த அறையில் இருந்து வெளியேறியுள்ளார்.  இதன் பின்னர் அந்த இரண்டு பெண்களும் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து ஹோட்டலில் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர்களை வரிசையாக நிறுத்திவைத்து அந்த பெண்களை வைத்து அடையாளம் காண கூறியுள்ளனர்.  அப்போது அந்த பணியாளரின் ஒருவர்தான் தங்கள் அறைக்கு வந்தவர் என என அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார்.  பின்னர் போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர் பெயர் பலராம் (வயது 22) என்பதும், பெண்கள் இருக்கும் அறையில் ஜன்னல் வழியாக நு...

ப்ளு சட்டை மாறனை கொளுத்திய சிம்பு ரசிகர்கள்! Medical Tamizha

 செப்டம்பர் பதினைந்து 2022 நடிகர் சிம்பு நடித்த " வெந்து தணிந்தது காடு " திரைப்படம் வெளியானது.  இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி , ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிட்டார்கள்.  "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பு குறித்தும் இத்திரைப்படத்தை குறிக்கும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டு  இருந்தார்.  குறிப்பாக "வெந்து தணிந்தது காடு " திரைப்படம் நன்றாகவே இல்லை. சரியான மொக்கை திரைப்படம். கௌதம் மேனனுக்கு படம் எடுக்க தெரியவில்லை. அவர் ஒரு வாய்ஸ் ஓவர் பைத்தியம் என்று கூறி அவருடைய யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டிருந்தார்.  சிம்புவை பற்றி அவதூறாக பேசிய ப்ளு சட்டை மாறனை கண்டித்து சிம்பு ரசிகர்கள் மாறனின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து தீயால் கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

பிறை ஆசனம் - செய்முறை,பலன்கள் யோகாசன வகைகள்

 பிறை என்றால் பாதி நிலவு. இந்நிலையில் உடலின் வெளிப்புற வளைவு நிலவின் அரைவட்டம் மாதிரி தெரிவு தால் இப்பெயர் செய்முறை: முதலில் நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத் துக் கொள்ளவும் பின்னர் கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பின்னால் முடிந்த அளவிற்கு வளைய வேண்டும். இப்போது உடல் எடை முழுவதும் தொடையிலும் கால் விரல்களிலும் இருக்கவும். மெல்ல மெல்ல முதுகை சாய்த்து கைகளை கீழறக்கி கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும், கண்களை திறந்து வைக்கவும்.   நேர அளவு: பத்து முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். இதை இரண்டு மூன்று முறை செய்யலாம்.  பலன்கள்: முதுகுத்தண்டு பலம் பெறும். முதுகின் கூனல் நிலை அகன்று நிமிர்ந்த மார்பு பெறுவீர்கள். நெஞ்சக் கூடு நன்கு விரிவதால் மார்பும், நுரையீரலும் அகன்று சுவாச உறுப்பு கட்கு மிகுந்த பலம் கொடுக்கும்.   பயிற்சியாளர் கவனத்திற்கு: முதலில் இந்த ஆசனம் செய்யும் பொழுது முழுவதும் வளைய வராது. ஆனால் பயிற்சியை விடாமல் தொடரத் தொடர சில நாட்களிலேயே ஒன்றாக இரு கால்களையும் கையினால் பிடித்த படி பின்னால் வளையும் நிலை கிட்டும். முழங்கால்கள் வளையாமல் பார்த்துக் கொள...

அர்த்த சிரசாசனம்- செய்முறை, பலன்கள் யோகாசன வகைகள்

 அர்த்த என்றாவ் பாதி. சிரசு என்றால் தலை. இந்நிலை பாதி தலை கீழாக நிற்பது ஆகும்.   செய்முறை: விரிப்பை நான்காக மடித்து தரையில் வைக்கவும். வஜ்ரா சனம் நிலையில் முட்டி போட்டு இருக்கவும். முழங்கையை தரையில் ஊன்றவும்.  இரண்டு முழங்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி இரண்டு தோளுக்கும் உள்ள இடை வெளியை விட சற்று அதிகமாக இருக்க வேண்டும்.  இரண்டு கை விரல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது இரண்டு உள்ளங்கைக்கும் இடைவெளி இருக்கும்.  இப்போது தலையை இடைவெளி இருக்கிற இடத்தில் ஊன்றவும். தலை நேராக விரிப்பில் அழுத்தும். இப்போது மெல்ல முட்டியை உயர்த்தி கால்விரல்களை தலையை நோக்கி கொண்டு வரவும்.  உடலை முக்கோண வடிவில் வைத்திருக்கவும். தரையில் தலை, கால்விரல், கை கள் மட்டும் பதிந்திருக்கும். கண்ணை மூடி உடலை தளர் வாக வைக்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்.  நேர அளவு: ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் செய்யலாம். ஒரு முறை செய்தால் போதுமானது. பலன்கள்: சிரசாசனத்தின் பாதி பலன்கள் இதன் மூலமும் கிடைக்கும்.  பயிற்சியாளர் கவனத்திற்கு: ஆரம்ப நிலை பயிற்சியாளர்களும், வயதானவர்களு...

சன்னி லியோன் நடிக்கும் "OH MY GHOST" படம் எப்போ ரிலீஸ்?

 பாலிவுட் நடிகையான சன்னி லியோன் இந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்து மிகவும் பிரபலமானவர். தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் சன்னிலியோனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது தமிழில் சன்னி லியோன் நடிக்கும் முதல் திரைப்படம் ஆன ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படத்தை R யுவன்  இயக்கத்தில் நடித்து வருகிறார். OMG Movie Poster  இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரல் ஆன நிலையில் தற்போது பட குழுவினர் திரைப்பட டீஸர் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வமான தேதியை அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் 10 2022 அன்று நடிகர் ஆர்யா முன்னிலையில் இப்படத்தின் முதல்கட்ட டீசர் வெளியிடப்படும் என்று பட குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். சன்னி லியோன் தமிழில் நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சதீஷ் இத்திரைப்படத்திற்கு கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

மத்ஸ்யாசனம்-செய்முறை ,பலன்கள்-யோகாசன வகைகள்

 மத்ஸியா என்றால் மீள் என்று பொருள். இந்த ஆசனம் நீரில் மீன் போல் மிதக்க உதவுவதால் இப்பெயர்.   செய்முறை: பத்மாசனத்தில் அமரவும். பின் அப்படியே கால்கள் தரை யில் இருக்க மெல்ல பின் பக்கமாக படுக்கவும்.  கைகளை தலைப்பக்கம் தரையில் ஊன்றி உடம்பை மேலே உயர்த்தி பின்புறம் ஒரு வளைவு போல இருக்க நெஞ்சுப்பகுதி, கழுத்து உயர்ந்து இருக்க வேண்டும். உச்சந்தலையை தரையில் பதிய வைக்க வேண்டும். குறுக்காக உள்ள கால்களை கைகளால் பற்றிக் கொண்டு தலையை மேலும் பின்னால் இழுத்து முதுகு வளைவை அதிகப்படுத்தவும். நேர அளவு:  பத்து - முதல் இருபது வினாடி செய்யவும். ஒரு முறை செய்தால் போதுமானது. பலன்கள்: இந்த ஆசனம் நுரையீரல், பீட்யூட்டரி, தைராய்டு கோளங் கள் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு ஊக்கமனிப்பதாகும். இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்படையச் செய்யும். மார்புக்கூடு அகன்று விரியும் இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரல் தொடர்பான நோய் கள், சுவாசகாசம் எனப்படும். ஆஸ்துமா, கஷயரோகம், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.  பயிற்சியாளர் கவனத்திற்கு: பருமனாக உள்ளவர்கள் பத்மாசனம் செய்ய முடியா விட்டால் சாதாரண நிலையி...

திரிகோண ஆசனம் | யோகாசன வகைகள்-medical tamizha

 இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது.    செய்முறை:     முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும். பிள் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்தி நிற்க வேண்டும். மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும்.  இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். உடலை இடது பக்கமாக வளைக்கும்போது முழங்காலை யோ, உடலின் மற்ற பாகங்களையோ வளைக்கக் கூடாது. இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும். நீட்டிய இடது கையின் நுனிவிரலால் இடது பாதத்தைத் தொட வேண்டும். இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக் கக் கூடாது. அச்சமயம் முகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும்.  இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும். அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வலது புறத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு மூ...

இன்றைய ராசிபலன்கள் (8 செப்டம்பர் 2022)

08-09-2022 இன்றைய தேதிக்கான ராசி பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. --------------------------------------------------------------------------- எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும்.  வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள். --------------------------------------------------------------------------- கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். --------------------------------------------------------------------------- குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடி...

"பத்மாசனம்" செய்முறை-யோகாசன வகைகள்

 பத்மா என்றால் தாமரை என்று பொருள். இந்த ஆசனம் செய்யப்படும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும். ஆகவே இந்தப் பெயர்.  செய்முறை :  சமமான தரையில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்தவும் முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்கவும் பிறகு அதே போன்று இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைக்கவும்.  குதிகால்கள் இருபுறமும் அடிவயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைய வேண்டும். இடது கை இடது முட்டியில் வைக்கவும். வலது கை வலது முட்டியில் வைக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவும் ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்கவும். (சின்முத்ரா) முதுகை சற்றும் கோணல் இல்லாத நிலையில் நன்றாக நிமிர்த்தி வைக்கவும் கண்களை மூடி மனதை அமைதியாக வைக்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும்.  நேர அளவு: 'முதலில் 1-5 நிமிடங்கள் வரை செய்யலாம். பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.  பலன்கள்: பிராணாயமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம். இடுப்புப் பகுதிக்கு மிகுந்த இரத்த ஓட்டம் அளித்து தண்டுவிட அடி எலும்பு மற்றும் முதுகு தண்டு ...