விஞ்ஞானம் மனித குலத்துக்கு எத்தனையோ வகையில் உதவினாலும், அதனால் சில விபத்துக்களும் ஏற்பட்டு விடுகின்றன.மின்னோட்டத்தின் சக்தியைப் பொறுத்து அதிர்ச்சி அதிகமாகி சுயநினைவு இழந்து, சுவாசம் தடைப்பட்டு, இருதய இயக்கம் சிரமப்படுகிறது.
சுயநினைவு இல்லாமல் போகுதல், மூச்சை அடைதல், நினைவு தடுமாறுதல் இவை எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பிடுகிற வெவ்வேறு செயல்கள் என்றாலும் இவற்றிற்கு முதலுதவி செய்தால் ஆபத்தான நிலைமை யிலிருந்து பாதிக்கப்பட்வர்களை மீட்கலாம்.
மின்சாரம் பாதிக்கப்பட்டவரை எப்படி மின்சாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவது?
மின்சாரத்தில் இழுக்கப்பட்டவரைக் காப்பாற்ற உடனே மின்சார சுவிட்சை நிறுத்த முயற்சிக்க வேண்டும்:
மின்சாரக் கம்பியால் இழுக்கப் பட்டவரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
மின்சாரம் கசியும் இடத்திலிருந்து பத்து மீட்டர் இடத்தைச் சுற்றித் தரையிலும் மின்சாரம் இருக்கு மென்பதால் பாதிக்கப்பட்பவரை மீட்க வெறுங் கால்களுடன் அவரை அனுகக்கூடாது. காலில் ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு அவரைக் காப்பாற்றவேண்டும்.
உலோகம் அல்லாத கம்பு, கட்டைகளால் அவரைப் பிரித்து அப்புறப்படுத்தவேண்டும். ஈரமான செருப்பு, ஈரமான கம்பு, சட்டைகளை உபயோகிக்கக்கூடாது. இவற்றால் பயனில்லை.
மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவரை என்னென்ன முதலுதவிகள் செய்து உடனே காப்பாற்றலாம்?
மின்சாரம் தாக்கப்பட்டவரைச் சிரமப்படுத்தாமல் தூக்கி வந்து படுக்க வைக்கவேண்டும். இவருடைய முகம் சிவந்தும், நாடி பலகீனமாகவும் இருக்கும். அவர் தலையைச் சற்று உயர்த்திவைத்துக் கழுத்து மற்றும் உடலை இறுக்கிக்கொண்டிருக்கும் துணிகளைக்த் தளர்த்தவேண்டும். உடல் வெது வெதுப்பாக இருக்கும்படி கம்பளியால் போர்த்தவேண்டும். அம்மோனியா ஸ்பிரிட்டில் பஞ்சை நனைத்து மூக்குக்கு முன்னால் இரு வினாடிகள் பிடிக்கவேண்டும்.
முகம் நீலம் பாய்ந்து, நாடி அடங்கி சுவாசம் நின்று விடுமானால் உடனே செயற்கைச் சுவாச முறையில் அவரை நன்கு இயக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் இருதயமும் செயலற்றிருப்பதால் இதயத்தையும் பிசைந்து விடவேண்டும். இந்த இரண்டு வேலைகளையும் ஒரே சமயத்தில் ஒருவரால் செய்யமுடியாது. இரண்டு பேர் செய்யவேண்டும்.
தாக்குண்டவரை மல்லாந்து படுக்கும்படி செய்து அவர் வாயில் ஊதவேண்டும். நிமிஷத்திற்கு 15 முறை ஊதவேண்டும். இது செயற்கை முறையில் சுவாசத்தை இயங்கச் செய்யும் முறை. இதுபோலவே அவருடைய நெஞ்சையும் பிசைந்துவிட வேண்டும். இதை வினாடிக்கு ஒருமுறை செய்யவேண்டும். தொடர்ந்து நீண்ட நேரம் இந்த இயக்கும். வேலையைச் செய்யவேண்டும். இவை எல்லாம் முதல் உதவிகள்.
மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவரை மல்லாக்கப் படுக்க வைத்து அவர் வாய் மூலம் மற்றவர் ஊதுவதால் கிளர்ச்சி உண்டாகிச் சுவாசம் மெதுவாகத் தொடரலாம். வாய் அல்லது மூக்கு மூலமும் ஊதலாம். ஊதுபவர் ஆரோக்கியம் உள்ளவராக இருக்கவேண்டும். நன்றாக மூச்சை இழுத்து அடக்கி வைத்துப் பிறகு ஊதவேண்டும். அவரைக் குப்புறப்படுக்க வைத்து முகத்தைத் தரையில் படாமல் சற்றுத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடுப்புப் பகுதியை அமுக்கிவிட வேண்டும். இவை எல்லாம் அவர் சுவாசம் ஒழுங்காக நடப்பதற்கான முயற்சிகள்.
முதலுதவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
நிலைமை மோசமாகிறது என்று அறிந்தால் உடனே ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். மருத்துவமனையில் அவருக்குப் பிராணவாயு செலுத்துவார்கள். இருதயம் நின்றிருந்தால் அதை ஊக்குவிக்க ஊசி மருந்து கொடுப்பார்கள். மருத்துவமனைக்கு மின்சாரம் தாக்கப்பட்டவரை எடுத்துச் செல்லுமுன் சில முதலுதவிச் சிகிச்சை மறைகளைத் தெரிந்தவர்கள் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டு விட்டால் சீக்கிரத்தில் ஆபத்தான சுட்டத்தை அடையநேரும்.
எந்தத் தாக்குதல் ஏற்பட்டாலும் அதற்குச் செய்ய வேண்டிய முதலுதவிகளைச் செய்ய நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் பல விபரீதங்களைத் தவிர்க்கலாம்.
Comments
Post a Comment