Skip to main content

Google ads

சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 நடப்பது, நீந்துவது, படகு விடுவது, சைக்கிள் ஓட்டுவது இவை எல்லாம் மிதமான தேகப் பயிற்சிகள், இளைஞர்களும், முதியவர்களும் செய்யக் கூடிய ஒரு பயிற்சி சைக்கிள் சவாரி. சைக்கிள் ஓட்டுவதை நம் அவசியத்திற்காகச் செய்யப்படும் ஓர் அலுவலாக நினைக்கிறோம்.

 உடற்பயிற்சியாக எவரும் நினைப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல இருதய நோய் ஆராய்ச்சிக் கழகம், சைக்கிள் ஓட்டுவதை ஆராய்ச்சி செய்து இதனால் இருதய நோய்களைப் போக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது. அமெரிக்காவில் இருதய நோயாளிகள் பெருகி வருவதால் இவர்களுக்குச் சைக்கிள் பயிற்சி அவசியம் தேவை என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டோ. நின்றுகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது இரு நிமிஷத்திற்கு இருபது தடவை சுவாசிக்கிறோம். அப்போது சுத்தமான காற்று இரத்தக் குழாய்கள் மூலம் உச்சி முதல் உள்ளங்களால் வரை சென்று திரும்புகிறது. இதனால் பிராண வாயு கிரசிக்கப்பட்டு, கரியமிலவாயு வெளியே தள்ளப்படுகிறது.


Cycle exercise


சாதாரண நிலையில் இரத்த ஓட்டம் மந்த கதியில் செல்கிறது. ஆனால் நடக்கும்போதோ, ஓடும் போதோ, சைக்கிள் சவாரி செய்யும் போதோ இரத்த ஓட்டம் துரிதமாக நடைபெறுகிறது. அதிகமான காற்றைச் சுவாசிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அதிக அளவில் கரியமில் வாயுவை வெளியேற்றமுடிகிறது.

சைக்கிள் ஓட்டும்போது இரண்டு கைகள் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொண்டு திரும்பும் திசை எல்லாம் கை அசையவும், கால் பாதங்கள் மிதியை அழுத்தி, பெடல் சுற்றும்போது கால் எலும்புகளும், கெண்டைக்கால் தசைகளும், முட்டி, தொடைப் பகுதி மற்றும் இடுப்புப் பகுதியும் அதோடு சேர்ந்து வயிறும் அசைக்கப்படுவதால் கால்களும் வரும் இரத்தம் மேலே தள்ளப்பட்டு இருதயத்திற்குச் சென்று சுத்திகரிக்கப்படுகிறது. நல்ல ஜீரண சக்தி உண்டாகிறது. நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் சைக்கிள் சவாரி வலுவூட்டுகிறது.

மலச்சிக்கலைப் போக்கவும், உடல் கனத்தை, ஊளை சதைகளைக் குறைக்கவும் மிகுந்த நன்மையைச் செய்கிறது நீணட நேர சைக்கிள் பயணங்களால் மூலநோய், விரைவீக்கம் ஏற்படுகிறது என்று சொல்லப்படுவது உண்மையே. எதுவும் அளவை மிஞ்சக் கூடாது.

பியூட்டி கிளினிக்குகளில் சைக்கிள் பயிற்சியையும் சிகிச்சை ஒரு செயல்படுகிறார்கள்.முறையாகச் சேர்த்துக்கொண்டு சைக்கிள் ஏழைகளின் வாகனம் என்று சொல்லப் பட்டாலும் இப்போது உடல்நலத்தைக் கருதிப் பணக்காரர்களின் வாகனமாக மாறிக்கொண்டு வருகிறது. எல்லா வயதினருக்கும் சாத்தியமான ஓர் உடற்பயிற்சிச் சாதனம் சைக்கிள். நம்மைச் சுமந்து கொண்டே நமக்கு நன்மை தரும் ஓர் இயந்திரம் சைக்கிள் என்பதை மறந்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும